More
Categories: Cinema News latest news

அன்பறிவுடன் சும்மாவா வச்சாரு கூட்டணி? பின்னணியில் இப்படி ஒரு சமாச்சாரத்துடன் களமிறங்கும் கமல்

Actor Kamal: தமிழ் சினிமாவில் உலக நாயகனாக அனைவர் மத்தியிலும் பெரும் மரியாதையுடன் வலம் வரும் நடிகர் கமல்ஹாசன். கமல் தற்போது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். ஏற்கனவே படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்த நிலையில் படத்தின் நீளம் கருதி அதை பார்ட் 3 ஆக எடுத்து வைத்திருக்கிறார்கள்.

அதனால் பார்ட் 2க்காக இன்னும் கொஞ்சம் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருப்பதால் அதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார் கமல். அதுவும் போக மணிரத்தினத்தின் தக் லைஃப் படத்திலும் நடிக்க ரெடியாகியிருக்கிறார். அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

Advertising
Advertising

இதையும் படிங்க: குக் வித் கோமாளி சீசன் 5 தொடங்க போகுதுங்கோ!… எண்ட்ரி தர இருக்கும் சூப்பர் பிரபலங்கள்!..

இதற்கிடையில் எச்.வினோத் படமும் கமல் கைவசம் இருந்த நிலையில் தற்காலிகமாக அந்தப் படத்தை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இதனிடையில் திடீரென ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவுடன் கமல் கூட்டணி வைக்கப் போவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. ஆனால் அதற்கு பின்னாடி ஒரு காரணமே இருக்கிறது.

இந்தியன் 2 மற்றும் விக்ரம் போன்ற படங்களில் அன்பறிவின் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தாராம் கமல். அது கமலுக்கு மிகவும் பிடித்துப் போனதாம். அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே அனிருத்தை வைத்து அன்பறிவு ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டு அந்த படம் டிராப் ஆன விஷயத்தையும் கமல் அறிந்திருக்கிறார்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் இல்லாத அயலான்2? ஆனா அவரு தான் ஹீரோ… என்னங்க இப்படிலாம் யோசிக்கிறாங்க?

இதை பற்றி கேட்ட கமல் எனக்கு ஏதாவது கதை இருக்கிறதா என அவர்களிடம் கேட்டிருக்கிறார். அவர்களும் கதை சொல்ல கமலுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டதாம். இதோடு இன்னொரு பெரிய காரணம் என்னவெனில் கமலின் ஆஸ்தான ஸ்டண்ட் கலைஞராக இருந்தவர் விக்ரம் தர்மா. அவரை எப்படியாவது இயக்குனராக்க வேண்டும் என கமல் நினைத்தாராம். விக்ரம் தர்மா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க வேண்டும் என இருந்தாராம்.

ஆனால் அதற்குள் விக்ரம் தர்மா இறந்து போக அந்த வாய்ப்பை அன்பறிவை வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என நினைத்துதான் அவர்களுக்காக ஒரு படம் நடிக்க வேண்டும் என முன்வந்திருப்பதாக கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள். இது கிட்டத்தட்ட விக்ரம் தர்மாவிற்கு கமல் கொடுக்கும் டிரிபியூட் என சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: நண்பர்களுக்காக ரஜினி தயாரித்து நடித்த படம்!… இப்படி ஒரு தங்க மனசுக்காரரா ரஜினி?!..

Published by
Rohini

Recent Posts