வெறும் 11 ரூபாய் அட்வான்ஸ் பெற்றுக் கொண்டு கமல் நடித்த படம்!.. எல்லாம் அவருக்காகத்தான்!.

Published on: April 7, 2024
kamal
---Advertisement---

Actor Kamal: தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வலம் வரும் கமல் குழந்தை நட்சத்திரமாக இந்த சினிமாவில் பயணித்து வருகிறார். இன்று சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிக்கு சீனியர் என்றாலும் ரஜினிக்கு இருக்கும் புகழை விட கமலுக்கு குறைவுதான். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்தவராக காணப்படுகிறார்.

சினிமாவில் இருக்கும் அத்தனை நுணுக்கங்களையும் அறிந்தவர் கமல். சிவாஜிக்கு பிறகு நடிப்பில் மன்னன் என்றால் அது கமல்தான். புது புது தகவல் தொழில் நுட்பங்களை தன் படங்களில் புகுத்தி அதன் மூலம் சினிமாவை வேறொரு புதிய பரிணாமத்திற்கு கொண்டு செல்ல விரும்புவார். அவருக்கு பக்க பலமாக இதே துறையில் பல கலைஞர்கள் கமலுக்கு உறுதுணயாக இருந்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: சரியான பேராசை புடிச்ச சுயநலவாதி வடிவேலு!.. கூட இருக்குறவங்களுக்கு சம்பளமா இதைத்தான் தருவாரா?..

அவரின் 60 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை போற்றும் விதமாக ஒரு விழா எடுத்து கொண்டாடினார்கள். அதில் கமல் தன் வாழ்வில் மறக்க முடியாத ஒரு 60 பேரின் பெயரை குறிப்பிட்டார். அதில் மிக முக்கியமானவர் இயக்குனர் ஆர்.சி. சக்தி. ரஜினிகாந்தை வைத்து இயக்கிய தர்மயுத்தம், விஜயகாந்த் நடித்த மனக்கணக்கு, கமலஹாசன் நடித்த உணர்ச்சிகள், மற்றும் ராஜேஷ், லட்சுமி நடித்த சிறை ஆகிய திரைப்படங்களின் மூலம் புகழ்பெற்றார்.

ஆர்.சி.சக்தியும் கமலும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். ஆனால் இருவருக்குக்குள் இருக்கும் ஒரே வேற்றுமை. கமல் இயக்குனராக வேண்டும் என சினிமாவிற்குள் வந்தவர். ஆனால் ஆர்.சி. சக்தியோ நடிகனாக வேண்டும் என சினிமாவிற்குள் வந்தவர். சொந்த ஊரில் ஆர்.சி.சக்தி நாடகங்களில் நடித்திருக்கிறார். அதன் காரணமாக உதவி இயக்குனராக பணிபுரிய ஆர்.சி.சக்திக்கு வாய்ப்பு வந்தது.

இதையும் படிங்க: விஜயின் கடைசி நாயகி இவர் தானா.. தளபதி69 திரைப்படத்தில் மீண்டும் அந்த நடிகையா?

அதன் விளைவுதான் பொற்சிலை என்ற படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார். அங்கு துரு துருவென ஒரு கேரக்டர் அங்குமிங்குமாக ஓடிக் கொண்டே இருக்க அந்த இளைஞனை ஆர்.சி.சக்திக்கு மிகவும் பிடித்துவிட்டது. பிடித்த மாத்திரத்திலேயே கமலை வைத்து ‘உணர்ச்சிகள்’ என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்தார் சக்தி. அதிலிருந்தே இருவருக்குமான நெருக்கம் அதிகமானது.

அதன் காரணமாகவேதான் உணர்ச்சிகள் படத்திற்காக கமல் சக்தியிடம் வாங்கிய முன்பணம் எவ்வளவு தெரியுமா? வெறும் 11 ரூபாய்தானாம். இருந்தாலும் அந்த உணர்ச்சிகள் படம் வெளியாகி எப்பேற்பட்ட அலைகளை உருவாக்கியது என அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

இதையும் படிங்க: வெங்கட் பிரபு படமே வேண்டாம்னு சொன்ன ரியல் கோட் ராமராஜன் தான்!.. என்ன மேட்டருன்னு தெரியுமா?..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.