உண்மையிலேயே சகலகலாவல்லவன்தான்! கமல் வாங்கிய தேசிய விருதுகள் எத்தனை தெரியுமா?

kamal
Actor Kamalhasan: இந்திய சினிமாவின் பெருமையாக கருதப்படும் நடிகர்களில் மிகவும் குறிப்பிடத்தக்க நடிகர் கமல். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று 70வயதை அடைந்தும் இன்னமும் தன் சினிமா பயணத்தை சிறப்புடன் நடத்திக் கொண்டு வருகிறார்.
குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்த கமல் அரங்கேற்றம் என்ற படத்தின் மூலம் முதன் முதலாக ஹீரோவாக அறிமுகமானார். அதிலிருந்தே அவர் வெற்றிப்பயணம் தொடர ஆரம்பித்து விட்டது. விதவிதமான கதைக்களம், வித்தியாசமான கதாபாத்திரம் என மக்களின் நன் மதிப்பை பெற்ற நடிகராக மாறினார் கமல்.
இதையும் படிங்க: அஜீத்துக்காக பார்த்து பார்த்து சட்டையை வடிவமைத்த ஷாலினி… காதலிக்கே சஸ்பென்ஸ் வைத்த தல…!
சினிமாவை தவிற வேறொன்றுமே தெரியாது என்றாலும் சினிமாவில் தெரியாத துறையே இல்லை என்று சொல்லலாம். எல்லாத் துறைகளிலும் கால்பதித்து ஒரு அற்புத உன்னதமான கலைஞன் என்ற பெயரை பெற்றார் கமல்.
சினிமாத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது தேசிய விருது. அந்த தேசிய விருதை நான்கு முறை வென்ற நடிகர் என்ற பெருமைக்குரியவர் கமல். அதில் மூன்று முறை சிறந்த நடிகருக்காகவும் ஒரு முறை சிறந்த தயாரிப்பாளருக்கான விருதாகவும் பெற்றிருக்கிறார்.
இதையும் படிங்க: அமீருக்கு ஆதரவாக களமிறங்கிய சசிகுமார்..! என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா? சூர்யா தரப்பு இப்போவாது பேசுமா?
மூன்றாம் பிறை படத்தில் நடிகை ஸ்ரீதேவிக்குத்தான் தேசிய விருது கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் க்ளைமாக்ஸ் காட்சியில் அசத்திய கமல் அந்தப் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தட்டிச் சென்றார்.
அதே போல் மணிரத்தினம் இயக்கத்தில் நாயகன் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காகவும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இரண்டாம் முறை கமல் பெற்றார். அதன் பிறகு இந்தியன் படத்தில் நடித்ததற்காகவும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மூன்றாம் முறை பெற்றார்.
இதையும் படிங்க: பிக்பாஸில் இந்த வார எலிமினேஷன் இவங்க தானா..! மிஸ்ஸான புல்லி கேங்கின் மெயின் டிக்கெட்..!
தேவர் மகன் என்ற ஒரு காவியத்தை தயாரித்ததற்காக சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருதை கமல் பெற்றார். இப்படி நான்கு முறை விருதுகளை பெற்ற கமல் இன்னும் எத்தனை விருதுகளை பெற போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.