Connect with us

Biggboss Tamil 7

பிக்பாஸில் இந்த வார எலிமினேஷன் இவங்க தானா..! மிஸ்ஸான புல்லி கேங்கின் மெயின் டிக்கெட்..!

Biggboss Tamil: பிக்பாஸ் சீசன் 7ன் இந்த வார எலிமினேஷன் ரிசல்ட் குறித்த தகவல் கசிந்துள்ளது. கிட்டத்தட்ட போன வாரம் போன்று இந்த முறை அதில ஒன்னும் இல்ல போட்ருங்க போல தான் ரிசல்ட்டும் அமைந்து ரசிகர்களுக்கு மொக்கை கொடுத்து இருக்கிறது.

ப்ரதீப் ஆண்டனி வெளியேற்றத்துக்கு பின்னர் ஷோ பெருவாரியான ரசிகர்களுக்கு மொக்கையாகவே சென்று கொண்டு இருக்கிறது. கிட்டத்தட்ட ஷோவில் இருந்து எந்த ஒரு கண்டெண்ட்டும் இல்லாமல் வெறும் வாய் பேச்சு மட்டுமே அதிகம் இருக்கிறது. இதில் சண்டையை வச்சே 55 நாட்களுக்கு நிகழ்ச்சியை ஓட்டிவிட்டனர்.

இதையும் படிங்க: ராஷ்மிகாவின் காதலர் இவர் தானா? அனிமல் படக்குழு மொத்தமாக போட்டுடைத்த உண்மை.. கவலையில் ரசிகர்கள்..!

கமல்ஹாசனும் ரசிகர்கள் நினைப்பதை எதுவும் கேள்வி கேட்காமல் அவர் பாட்டுக்கு சில கேள்விகளை கேட்டுவிட்டு கிளம்பி விடுகிறார். இந்த வார துவக்கத்தில் அர்ச்சனா, விசித்ரா, மணி, ப்ராவோ, ரவீனா, அக்‌ஷயா, பூர்ணிமா, மாயா உள்ளிட்டோர் நாமினேஷனில் வந்தனர்.

இதில் ஆரம்பம் முதலில் பூர்ணிமாவும், மாயாவும் கடைசி இடத்தினை பிடித்து வந்தனர். அதனால் இந்த வார டபுள் எவிக்‌ஷனில் மாயா அல்லது பூர்ணிமா ஒருவர் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிர்ச்சி தரும் வகையில் வோட்டிங்கில் பூர்ணிமாவுக்கு மேலே இருந்த அக்‌ஷயா மற்றும் ப்ராவோ வெளியேறி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஒரே நாளில் மொத்த வாழ்க்கையும் போச்சு… யாருக்கும் அருகதை இல்லை… தேவ் ஆனந்த் ஓபன் டாக்..!

மேலும் இந்த வாரம் பூர்ணிமா கமல் குறித்து நிறைய பேசி இருக்கிறார். செருப்பை செட்டை விட்டு தூக்கி வீசினார். நிறைய முறை மைக் போடவில்லை. இதையாவது கமல் கண்டிப்பாரா இல்லை எப்போதும் போல தட்டி விட்டு வெட்டி நியாயம் பேசி செல்வாரா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top