மினிமம் பட்ஜெட்.. பல கோடி லாபம்!.. அடுத்த படத்துக்கு கமல் போட்ட மாஸ்டர் பிளான்!...

by சிவா |
kamal
X

kamal

கமல்ஹாசன் சிறந்த நடிகர் மட்டுமல்ல. அவர் ஒரு சிறந்த வியாபாரியும் கூட. அவர் தயாரிக்கும் படங்களை சரியாக திட்டமிட்டு குறைவான பட்ஜெட்டில் எடுத்து அதிக லாபம் பார்த்துவிடுவார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் அவருக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் கமல் நடித்த திரைப்படங்களில் அதிக லாபம் கொடுத்தது விக்ரம் படம்தான்.

vikram

இதனால் முடங்கி கிடந்த கமல்ஹாசனின் மார்கெட் ஜெட் வேகத்தில் இருக்கிறது. சில கோடி சம்பளம் வாங்கி வந்த கமல் தற்போது பல கோடிகளை சம்பளமாக வாங்கும் நிலைக்கு உயர்ந்துவிட்டார். ரஜினிக்கு இணையாக சம்பளம் கேட்டாலும் ஆச்சர்யபடுவதிற்கில்லை.

இதை சரியாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் கமல் அடுத்தடுத்து சிறந்த இயக்குனர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் படங்களில் நடிக்கவுள்ளார். மீண்டும் லோகேஷுடன் இணைந்து விக்ரம் 3, அடுத்து ஹெச்.வினோத், மணிரத்னம், வெற்றிமாறன், பா. ரஞ்சித், என சிறந்த இயக்குனர்களின் படங்களில் அடுத்தடுத்து நடிக்கவுள்ளார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் எப்படியும் மெகா ஹிட் அடிக்கும்.

kamal

அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு 35 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளார். அதோடு, மினிமம் பட்ஜெட்டில் இப்படம் உருவாகவுள்ளதாம். எப்படியும் விக்ரம், இந்தியன் 2 ஆகிய படங்களின் வெற்றியால் இப்படத்தை அதிக லாபத்திற்கு வியாபாரம் செய்து விடுவார். இதன் மூலம் மீண்டும் கமல் பல கோடி லாபத்தை பார்த்துவிடுவார் என சினிமா வட்டாரத்தில் பேச துவங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: விஜய் ஆக்‌ஷன் படங்களில் மட்டும் நடிக்க காரணம் அந்த சம்பவம்தான்!.. இது தெரியாம போச்சே!…

Next Story