தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி பன்முக கலைஞராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். தன்னுடைய 60 ஆண்டு திரைப்பயணத்தை இன்று வரை வெற்றிகரமாகவே பயணித்துக் கொண்டிருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக இருந்ததில் இருந்து இன்று வரை ஒரு தன்னிகரற்ற நடிகராக காணப்படுகிறார் கமல்.
தன்னுடைய ஈடு இணையற்ற நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியதனால்தான் உலக நாயகன் என்ற கௌரவத்தோடு வாழ்ந்து வருகிறார்.தனது வாழ்நாள் முழுவதையும் சினிமாவிற்கே அர்ப்பணித்த ஒரு தன்னிகரற்ற கலைஞன் தான் கமல்.
இவர் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். வாங்கிய விருதுகள் ஏராளம். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் உலக சினிமாவிலேயே கமல் ஒரு சிறந்த நடிகர் என்பதை அவ்வப்போது நிரூபித்துக் கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க : ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் இவரா? மியூசிக் இந்த வாரிசா? ஏலேய் இருங்கல தல சுத்துது!
இவர் நடித்த ஒவ்வொரு படங்களுமே இவருக்கான அடையாளங்கள்தான். எத்தனை எத்தனை கதாபாத்திரங்கள், வித்தியாசமான கெட்டப்கள் என பார்க்கும் ரசிகர்களை நாளுக்கு நாள் பிரமிக்க வைத்தவர்.
இவரின் ஆரம்ப கால படங்களில் மிகவும் திருப்புமுனையாக அமைந்த படம் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த 16 வயதினிலே திரைப்படம்தான். அதற்கு முன்பு வரை ஒரு சில படங்களில் கமல் நடித்திருந்தாலும் இந்தப் படம் தான் அவரின் நடிப்பிற்கு தீனி போட்ட படமாக அமைந்தது.
இந்த நிலையில் ஒரு திரைப்படத்தை பற்றி விமர்சனம் செய்வதற்கு ஏகப்பட்ட ஊடகங்கள், சமூக வலைதளங்கள் என இருந்தாலும் அதை சரியான முறையில் விமர்சித்து மார்க் அடிப்படையில் ஒரு படத்தை மக்களிடையே நல்ல முறையில் கொண்டு செல்லும் பாலமாக அமைவது ஆனந்த விகடன்.
இதையும் படிங்க : அப்பாவோட அந்த படத்தை கொண்டாட நாட்டு வெடிகுண்டே வச்சாங்க!.. பகீர் கிளப்பிய சண்முக பாண்டியன்!..
ஆனந்த விகடனில் அதிக மார்க் வாங்கி விட்டால் ஏதோ ஒரு பெரிய விருதை வாங்குவதற்கு சமம். அந்த வகையில் இன்று வரை யாராலும் தொட முடியாத சாதனையை ஆனந்த விகடன் மூலம் நிகழ்த்தியிருக்கிறார் கமல். அதாவது இதுவரை எந்த படமும் வாங்காத ஒரு மார்க்கை அப்பவே 16 வயதினிலே படத்திற்கு கொடுத்திருக்கிறது ஆனந்த விகடன்.
67.5 மார்க் கொடுத்து அந்த படத்திற்கு ஒரு பெரிய கௌரவத்தையும் கொடுத்திருந்ததாம். ஆனால் ஒரு சில படங்கள் 50, 60 என பெற்றிருந்தாலும் அந்தப் படங்கள் பெரும்பாலும் கமலின் படங்களாகத்தான் இருந்ததாம்.ஆனால் இந்த 67.5 மார்க்கை இதுவரை எந்தப் படமும் நெருங்க முடியவில்லையாம். இந்த சுவாரஸ்ய தகவலை சித்ரா லட்சுமணன் கூறினார்.
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…
நடிகர் கவின்…