அப்பாவோட அந்த படத்துக்கு தியேட்டர்ல நாட்டு வெடிகுண்டே வச்சாங்க!.. பகீர் கிளப்பிய சண்முக பாண்டியன்!..

தல தளபதி படங்கள் வெளியானால் தியேட்டரே முதல் நாள் FDFSக்கு தீபாவளி போல களைகட்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். தியேட்டரில் சூடம் கொளுத்திக் காட்டுவது, பூசணிக்காய், தேங்காய்கள் உடைப்பது, சில இடங்களில் பட்டாசு கூட தியேட்டருக்குள்ளே வெடிப்பது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

ஆனால், அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு கேப்டன் விஜயகாந்தின் படத்தின் FDFSக்கு ரசிகர்கள் செய்யாத மறக்க முடியாத சம்பவத்தை அவரது மகன் சண்முக பாண்டியன் சமீபத்தில் அம்மா பிரேமலதாவுடன் கலந்து கொண்ட பேட்டியில் வெளிப்படையாக பேசி ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் அடைய வைத்துள்ளார்.

இதையும் படிங்க: அப்பன் தயவே வேண்டாம்!.. அம்மாவுக்கு செஞ்ச துரோகம்!.. பழிவாங்க களத்தில் குடித்துள்ளாரா வாரிசு?..

நடிகர் விஜயகாந்தின் படங்களின் முதல் நாள் காட்சி கொண்டாட்டம் எப்படி இருக்கும், நீங்க பார்த்த அனுபவம் ஏதாவது இருக்கா என தொகுப்பாளர் கேட்க விஜயகாந்தின் மனைவி பிரேமலதா திருமணம் ஆவதற்கு முன்னதாக நிச்சயம் பண்ணிட்டு குடும்பத்தோட கேப்டனுடன் பார்த்த முதல் ப்ரிவியூ ஷோ புலன் விசாரணை தான்.

அந்த படத்தை ஆரம்பத்தில் பார்த்தவர்களுக்கு படமே புரியவில்லை. வாங்குவதற்கே விநியோகஸ்தர்கள் தயங்கினர். ஆனால், ஜீவி தான் அந்த படத்தை பார்த்து விட்டு இது வெள்ளி விழா படம் என கொண்டாடி தமிழ்நாட்டின் மொத்த தியேட்டர் உரிமையையும் வாங்கி படத்தை வெளியிட்டார். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது என்றார்.

இதையும் படிங்க: சந்திரமுகி 2-வில் ரஜினி நடிக்காமல் போனதற்கு காரணம் ஷங்கர் – என்னப்பா சொல்றீங்க!..

திருமணத்துக்கு முன்பாகவே நான் அதிகம் பார்த்த விஜயகாந்த் படம் என்றால் அது நல்லவன் படம் தான் என்றும் பிரேமலதா தனது ஃபிளாஷ்பேக் ஸ்டோரியை ரசிகர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தினார்.

அப்படியே இந்த பக்கம் மகன் சண்முக பாண்டியன் பேசும் போது, இப்போதெல்லாம் FDFS ஷோன்னா தியேட்டர்ல சூடம் ஏத்துறது, பூசணிக்காய் உடைக்கிறது தானே நடக்கும். அப்போ ஒரு ஊர்ல எங்கப்பா படத்துக்கு மூன்று நாட்டு வெடிகுண்டுகளை தியேட்டருக்குள்ள வச்சி வெடிச்சாங்க, சம்பவம் நடந்த இடத்துக்கு நாங்க போய் பார்த்தோம். தியேட்டர் ஸ்க்ரீனெல்லாம் கிழிந்து, அன்னைக்கு ஷோவே நடக்காமல் போய் விட்டது. அந்தளவுக்கு வெறித்தனமான ரசிகர்கள் அப்பாவுக்கு இருந்தனர்.

இதையும் படிங்க: அடுத்த சூப்பர்ஸ்டார் இல்லைங்க!.. அடுத்த உலக நாயகனாகவே ஆகப் போகும் விஜய்!.. விளங்குமா?..

அந்த படம் என்ன படம் என்கிற கேள்விக்கு கஜேந்திரா படம் என சொல்லிய சண்முக பாண்டியன் அப்பாவின் ஃபேவரைட் வசனங்கள், பிடித்த பாடல்கள் என பல சுவாரஸ்ய விஷயங்களையும் ஷேர் செய்தார். சமீபத்தில் வெளியான சண்முக பாண்டியனின் படைத்தலைவன் படத்தின் டீசர் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில், கூடிய விரைவில் அந்த படம் வெளியாக உள்ளது.

 

Related Articles

Next Story