சந்திரமுகி 2-வில் ரஜினி நடிக்காமல் போனதற்கு காரணம் ஷங்கர் - என்னப்பா சொல்றீங்க!..
பி.வாசு இயக்கத்தில் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, நாசர், வடிவேலு போன்ற மிகப்பெரிய நடிகர்கள் நடித்து வெளியான திரில்லரான படம் சந்திரமுகி. ஜோதிகாவின் நடிப்பையே தூக்கி நிறுத்திய படமாக சந்திரமுகி திரைப்படம் அமைந்தது. படத்தில் அமைந்த பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
800 நாள்களை கடந்து வெற்றிகரமாக ஓடிய படமாக சந்திரமுகி திரைப்படம் அமைந்தது. இந்த நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை வாசு இப்போது எடுத்து முடித்திருக்கிறார். முற்றிலும் மாறுபட்ட நடிகர்களுடன் மாறுபட்ட கதையம்சத்துடன் இந்தப் படம் வெளியாக இருக்கின்றது.
இதையும் படிங்க : காணாதத கண்டு குதூகலிக்கும் அக்கட தேசம்! வாங்கிய ஒரு விருதுக்கும் சண்ட – அல்லு அர்ஜூனுக்கு போட்டியாக நிற்கும் நடிகர்
அனைவரின் கேள்வியாக இந்த இரண்டாம் பாகத்தில் ஏன் ரஜினி நடிக்கவில்லை என்பதுதான். அதற்கான பதிலை முதன் முறையாக பி.வாசு ஒரு பேட்டியில் கூறினார். அதாவது இந்த இரண்டாம் பாகத்திற்கான தூண்டுதலை முதன் முதலில் கொடுத்தது லதா ரஜினிகாந்த் தானாம். ஏன் சந்திரமுகியில் இருக்கும் வேட்டையன் கதாபாத்திரத்தை மட்டும் எடுத்து ஒரு படம் பண்ணக் கூடாது என கேட்டாராம் லதா.
அதன் பிறகு தான் அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் நுழைந்து ரஜினியிடம் காட்டியிருக்கிறார். ஆனால் அது சந்திரமுகி 2 இல்லையாம். வேட்டையனாக மட்டும் இருந்ததாம். அப்போது ரஜினி சங்கரின் ரோபோ படத்தில் படு பிஸியாக இருந்ததனால் வாசுவிடம் முதலில் கன்னடத்தில் இந்தப் படத்தை முடித்து விட்டு வாருங்கள் என்று சொல்லி ஆப்தமித்ரா என்ற தலைப்பில் வாசு கன்னடத்தில் எடுத்திருக்கிறார். அங்கு படம் மெகா ஹிட்டாம்.
இதையும் படிங்க : இளையராஜாவுடன் பணிபுரிந்த ‘எதிர்நீச்சல்’ பிரபலம்! வெளிவந்த தகவலால் ஷாக் ஆன ரசிகர்கள்
மறுபடியும் ரஜினியிடம் வந்திருக்கிறார் வாசு. அப்போது ஒரு வருடம் ஆகியும் ரோபோ படம் முடியாமல் இருந்ததாம். அது ஒரு காரணமாக ரஜினி கூறினாராம். இன்னொரு காரணத்தை ரஜினியால் சொல்லமுடியவில்லையாம். அப்படியே அந்தப் படம் டிராப் ஆனதாம். அதன் பிறகு தான் குசேலன் படத்திற்காக 10 நாள்கள் கால்ஷீட் கொடுத்து வாசு இயக்கத்தில் நடித்தாராம் ரஜினி.
ஆனாலும் அந்தப் படத்திற்கான விளம்பரம் அதிகமாகி விமர்சனம் கம்மியாகி விட்டதாக ரஜினி மிகவும் வருந்தினாராம். விளம்பரத்திற்கேற்ப படத்தில் அதிகமாக வந்திருந்தால் படம் நன்றாக ஓடியிருக்கும் என கூறி வருந்தினாராம்.