More
Categories: Cinema News latest news

எங்க அப்பா ஒன்னும் என்ன அப்படி வளர்க்கல! நிரூபர் கேட்ட கேள்விக்கு பொங்கி எழுந்த கார்த்தி

Actor Karthi: என்ன வேணா நடக்கட்டும்.. நான் சந்தோஷமா இருப்பேன்.. எனக்கு ராஜாவா நான் வாழுறேன் என்ற பாடல் கச்சிதமாக பொருந்தக்கூடிய நடிகர் என்றால் அது கார்த்திக்கு மட்டும்தான். இன்று தமிழ் சினிமாவில் இருக்கும் பல முன்னணி நடிகர்கள் நான் தான் பெருசு,  நீதான் பெருசு என போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் கார்த்தி இதுவரை தன்னை தேடி வரும் கதையின் மீது மட்டும் நம்பிக்கை வைத்து நல்ல நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தீபாவளி அன்று கார்த்தியின் நடிப்பில் ஜப்பான் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

Advertising
Advertising

இதையும் படிங்க: தலைவர் 171 படத்துக்கு வில்லன் இவர் தானா? அதுக்கு ரஜினிக்கே டபுள் ஆக்‌ஷன் போட்றலாம்.. ரெண்டு ஒன்னு தான்..!

இந்த ஜப்பான் திரைப்படம் கார்த்திக்கு 25வது திரைப்படமாகும். அதற்கு முன் நடித்த அத்தனை படங்களுமே வெவ்வேறு கதைகளம் கொண்ட படங்களாகவே கார்த்திக்கு அமைந்திருக்கிறது. அதுவும் பெரும்பாலும் வெற்றிப்படங்களாகவே அமைந்திருக்கிறது.

இந்த நிலையில் ஜப்பான் திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்த கார்த்திக்கிடம் நிரூபர்கள் பல கேள்விகளை முன்வைத்தனர். அப்போது ஜாதியை பற்றியும் அவர் நடித்த மெட்ராஸ் படத்தை பற்றியும் கேட்டனர்.

இதையும் படிங்க: விஜய் சொல்லாதத அஜித் என்கிட்ட சொன்னாரு! இவ்ளோ பர்ஷனல இப்படியா ஓப்பனா சொல்றது?

அதற்கு பதிலளித்த கார்த்தி  நான் சென்னையில் வளர்ந்த பையன். அதனால் எனக்கு ஜாதி எல்லாம் பார்க்க தெரியாது. ஜாதி என்றாலே என்னவென்று தெரியாது. பெரும்பாலும் சென்னையில் உள்ளவர்கள் ஜாதியை பார்க்க மாட்டார்கள். என்ன மச்சான், வா மச்சான் ,போ மச்சான் என்று பேசியே பழக்கப்பட்டவன் என்று கூறினார்.

மெட்ராஸ் படத்தில் கூட அந்த ஒரு சுவரை சுற்றி நடக்கும் கதையை மட்டுமே நான் பார்த்தேன். அதில் இருக்கும் ஜாதி என் கண்ணுக்கு தெரியவில்லை. எப்போதும் தெரியாது. ஏனெனில் நான் அப்படி வளர்க்கப்பட்டவன். நீங்கள் அப்படித்தான் பார்க்கிறீர்கள் என்றால் நீங்கள் பார்க்கும் விதம் தான் தவறு என கார்த்தி பதில் கூறினார்.

இதையும் படிங்க: சின்னவீடு படத்தால் நடந்த களேபரம்… கடைசியில் மன்னிப்பே கேட்கும் நிலைக்கு போனாராம் பாக்கியராஜ்..!

ஆனால் சூர்யாவின் திருமண சமயத்தில் சிவக்குமார் ஒரு மேடையில் ‘உன் அண்ணன் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டான்.  நீயாவது உன் அம்மா விருப்பப்படி நம்ம ஜாதி ஜனத்துல ஒரு பொண்ண பாத்து கல்யாணம் கட்டிக்கோனு சொல்லி ’கார்த்தியிடம் சொன்னதாக சிவக்குமார் கூறினார். இதை வைத்து என்ன முடிவுக்கு வருவது?

Published by
Rohini

Recent Posts