More
Categories: Cinema News Entertainment News latest news

நடிகர் கார்த்திக்கு இவ்ளோ பெரிய மகளா ? வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான கார்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது தன் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதனை வைரல் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவின் டாப் 10 நடிகர்கள் பட்டியலில் தன் இடத்தை எப்போதும் தக்க வைத்துகொள்பவர் தான் நடிகர் கார்த்தி. முன்னணி இயக்குனர்கள் மட்டுமின்றி அறிமுக இயக்குனர்கள் என தொடர்ந்து புதுப்புது இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதை வழக்கமாக வைத்துள்ளார் கார்த்தி. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்த கைதி திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து தம்பி, சுல்தான் என அடுதடுத்து ஹிட் கொடுத்துள்ளார் கார்த்தி.

Advertising
Advertising

தற்போது இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் என்ற படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்திருந்த நிலையில் விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்நிலையில், தனது விடுமுறை நாட்களை தன் குடும்பத்துடன் தற்போது கழித்து வரும் கார்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இரண்டு வருடங்களுக்கு பிறகு தன் குழந்தைகளுடன் வெளியே வந்துள்ளதாக புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் கார்த்திக்கு இவ்ளோ பெரிய மகளா என காமெண்ட் செய்து வருகின்றனர்.

Published by
sam

Recent Posts