More
Categories: Cinema News latest news television

முத்துவை நம்ப மறுக்கும் குடும்பம்… கோபத்தில் அண்ணாமலை… என்னங்கப்பா கதை இது… எரிச்சலில் ரசிகர்கள்…

Siragadikka aasai: இன்றைய எபிசோட்டில் பரவிய முத்துவின் வீடியோவால் குடும்பமே கோபத்தில் உட்கார்ந்து இருக்கின்றனர். மீனா அமைதியாக வீட்டுக்குள் வர விஜயா நில்லுடி நீ பாட்டுக்கும் உள்ள போற. பொண்டாட்டியா இருந்தா அவனை திருத்தணும்.

நீ நிம்மதியா இருக்க அவனை அப்படியே வச்சிருக்க. இனிமே உன்னை பூக்கட்டுறவன் பொண்டாட்டினு  சொல்ல மாட்டாங்க.  குடிகாரன் பொண்டாட்டினு தான் சொல்லுவாங்க என்கிறார். இனிமே உங்களையும் குடிக்காரன் அம்மானு தான் சொல்லுவாங்க என பதிலடி கொடுக்கிறார்.

இதையும் படிங்க: சூரிய வெளிச்சத்தில் சுகமா இருக்கும் நிவேதா பெத்துராஜ்!.. கமெண்ட்டுகளை மட்டும் பார்த்துடாதீங்க!..

எனக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் தானே ஆச்சு. நீங்க சின்ன வயசுலேந்து சொல்லி வளர்க்க வேண்டியது தானே என்கிறார். நான் வளர்த்த ரெண்டு பசங்களும் நல்லா தான் இருக்காங்க என்கிறார் விஜயா. அண்ணாமலை  பிரச்னை எல்லாம் உன்னால தான். உன் வாயை அடக்கு என பதிலடி கொடுக்கிறார்.

அந்த நேரத்தில் ஸ்ருதியின் அம்மா விஜயாவுக்கு கால் செய்கிறார். முத்து குடிச்ச சம்பவம் குறித்து கேட்டு அசிங்கப்படுத்த உடனே போனை வாங்கும் ஸ்ருதி இங்கையே எல்லாரும் அப்செட்டில் இருக்காங்க. நீ வேற போனை வைம்மா என கட் செய்து விடுகிறார். அப்போ வீட்டுக்கு வருகிறார் முத்து. காரை தூக்கிட்டு போயிட்டாங்கப்பா என அண்ணாமலையிடம் சொல்கிறார். குடிச்சிட்டு இருந்தா அப்படித்தான் தூக்கிட்டு போவாங்க என்கிறார்.

இதையும் படிங்க: சன் டே செம கூட்டம்!.. சுந்தர் சிக்கு அடித்த ஜாக்பாட்.. அரண்மனை 4 படத்தின் 3 நாள் வசூல் எவ்வளவு?..

நான் குடிக்கவே இல்லை என முத்து கூற நீ குடிச்சதால தான் ஊரே கேவலப்படுத்தி சிரிக்கிது என்கிறார். குடிக்கலைனு சொல்றேன்ல என முத்து மனோஜை அடிக்க சொல்ல குடிச்சதும் இல்லாம ரவுடித்தனமா செய்ற என அடிக்க கையை ஓங்குகிறார் அண்ணாமலை. மீனாவிடம் செல்லும் முத்து நான் குடிக்கலை என்கிறார். அவரும் நம்ப மறுக்க, குடிக்கலை என்பதை நிரூபிக்க நடந்து காட்டுகிறார்.

குடிச்சிட்டு நடக்கிறான் என்கிறார் மனோஜ். ஸ்மெல் எதுவும் வரலை என ரவி கூற எதுவும் அதுக்கு சாப்பிட்டு இருப்பான் என்கிறார். அண்ணாமலை எதுவோ பண்ணுங்க என வெளியில் சென்றுவிடுகிறார். ரோகிணி நாங்க வாங்க இருந்த காரை மாற்றி கொடுத்ததுக்கு வந்த கமிஷனில் தானே குடிச்சீங்க.

இனி எங்க விஷயத்தில் தலையிடாதீங்க எனக் கூறி செல்கிறார். விஜயா நீங்களா வீட்டை விட்டு வெளிய போயிடுங்க என திட்டிவிட்டு செல்கிறார். முத்து கிச்சனில் இருக்கும் மீனாவிடம் சென்று நான் குடிக்கலை எனக் கூற அவரும் நம்பாமல் பேசுவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

இதையும் படிங்க: தளபதி பட விழாவில் இளையராஜா செய்த வேலை!.. ரஜினி அவரை ஒதுக்க காரணமாக இருந்த சம்பவம்!…

Published by
Akhilan

Recent Posts