---Advertisement---

சிக்கன் மற்றும் மீன் மட்டுமே – தனது டயட் ரகசியங்களை உடைத்த கார்த்தி

Published on: March 24, 2026
karthi
---Advertisement---

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் கார்த்தியும் ஒருவர். இவர் தனக்கென தனி பாணியை கையாண்டு வருகிறார்.தனது நகைச்சுவை கலந்த எதார்த்த நடிப்பால் இன்று தனக்கென ரசிர்ககளை உருவாக்கி வைத்துள்ளார்.

இவரது அண்ணன் சூர்யா தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்தபோதிலும், நடிப்புக்கு வராமல் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகவே தனது பயணத்தைத் தொடங்கினார் கார்த்தி. பின்னர் 2007-ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. அதுமட்டுமல்லாமல் பல விருதுகளையும் பெற்று தந்தது.

தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன்’, பையா’, நான் மகான் அல்ல , சிறுத்தை , மெட்ராஸ் , ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘கைதி’ என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டரகளை தேர்ந்தெடுத்து தொடர் வெற்றிகளைக் கொடுத்தார்.

சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் பலருக்கு முன்னுதாரணமாகத் திகழ்பவர் கார்த்தி. உழவன் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பைத் தொடங்கி, விவசாயிகளுக்கும், விவசாயம் சார்ந்த முன்னெடுப்புகளுக்கும் தொடர்ந்து பல உதவிகளைச் செய்து வருகிறார். தனது மன்றம் சார்பாக சென்னையில் உணவகம் ஒன்றை நடத்தி குறைந்த விலையில் மதிய உணவை கொடுத்து வருகிறார்.

கார்த்தியை பொறுத்தவரை உடல் நலனில் அதிக் அக்கறை செலுத்துபவர்.

இந்த நிலையில் கார்த்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது ஆரோக்கியத்தின் ரகசியத்தைப் பகிர்ந்துகொண்டார். அவர் கூறியதாவது:

ஒரு நடிகனுக்கு அவனுடைய உடம்புதான் முதல் முதலீடு. ஃபிட்னஸ் என்பது நாம் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கிறோம் என்பது மட்டுமல்ல; நாம் உள்ளுக்குள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதைப் பொறுத்ததுதான். நம்முடைய ஆரோக்கியம் என்பது 70 சதவீதம் நாம் சாப்பிடும் சாப்பாட்டில் தான் அடங்கியிருக்கிறது. உணவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொண்டாலே பாதி ஆரோக்கியம் வந்துவிடும்.”

நான் பொதுவாக இனிப்பு வகைகளை சாப்பிடவே மாட்டேன். அதேபோல பீப் சாப்பிடும் பழக்கமும் எனக்குக் கிடையாது. அசைவ உணவுகளில் சிக்கன் மற்றும் மீன் மட்டுமே சாப்பிடுவேன். எப்போதாவது ஆசைக்காக ஒரு பீஸ் மட்டன் சாப்பிடுவேன், அவ்வளவுதான் என்று தனது டயட் ரகசியத்தைக் கூறியுள்ளார்.