பணத்தை எப்படி செலவழிச்சா சந்தோஷம்னு தெரியுமா? கார்த்தி சொன்ன டச்சிங்கான விஷயம்!..

ஒவ்வொரு மனிதனும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் கிடைக்கும் சில அனுபவங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்தியே முன்னேறுகிறான். ஆனால் அந்த முன்னேற்றமானது சும்மா வந்துவிடாது. அதற்கான உழைப்பையும், அயராத முயற்சியையும் கொடுக்க வேண்டும். அதில் கிடைக்கும் முன்னேற்றம் தான் நமக்கு திருப்திகரமானதாக இருக்கும்.

இதற்கு நடிகர்களும் விதிவிலக்கல்ல. யாரும் எளிதில் முன்னுக்கு வந்துவிட முடியாது. அதற்கு பின்னால் யாராவது ஒரு காரணகர்த்தா இருப்பார்கள். அந்த வகையில் நடிகர் கார்த்தி விழா ஒன்றில் அப்பா சிவக்குமாருடனான நெகிழ்ச்சிகரமான தருணங்களை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எங்க அப்பாவுக்கு அப்பா கிடையாது. அம்மா தான் கஷ்டப்பட்டு படிக்க வச்சாங்க. அப்பா கஷ்டப்பட்டு உழைக்காம இருந்தாருன்னா நாங்களும் கஷ்டப்பட்டுருப்போம். மில் வேலைக்குத் தான் போயிருப்போம்.

Karthi

Karthi

படிக்க வச்சிருக்க முடியாது. ஒவ்வொருவரோட உழைப்பு, நம்பிக்கை தான் முன்னேற்றம். நான் இங்க துவண்டு போய்விட மாட்டேன்கறதுக்கு உதாரணம் அப்பா தான்.

அவர் ஒவ்வொரு தடவையும் சொல்லிக்கொடுக்கற விஷயம் தான். போர்ட்டர் வருவாங்க. ஒரு பெட்டியைத் தூக்கிட்டுப் போனா 50 ரூபா கேட்பாங்க. அம்பது ரூபாயான்னு ஆச்சரியமா இருக்கும்.

அப்பா சரி வான்னுட்டு 100 ரூபா கொடுப்பாருன்னு கார்த்தி சொன்னார். அதற்கு நான், அப்பா 50 ரூபா தான அவரு கேட்டாரு. நீங்க ஏன் 100 ரூபா கொடுத்தீங்கன்னு கேட்பேன். அந்த 100 ரூபாவ வச்சி வீடு கட்டிருவாரா... நீ சும்மா இருப்பா. அவருக்கு இந்த ஒரு நாள் வேலை கிடைக்கறதே கஷ்டம்.

அந்த ஒரு நாள் எக்ஸ்ட்ரா கிடைக்கற ரூபாயை வச்சி குழந்தைகளுக்கு ஸ்வீட் வாங்கிக் கொடுப்பாரு. இல்ல சாப்பாடு வாங்கிக் கொடுப்பாருன்னு சொல்வாரு. அந்த மாதிரி சின்ன வயசுல இருந்து வளர்த்தது அப்பா தான்னு சொல்லணும். இந்த பணம் சந்தோஷமே கொடுக்காதுன்னு சொல்வாங்க.

அது பொய். அடுத்தவங்களுக்குக் கொடுத்தா ரொம்ப சந்தோஷத்தைக் கொடுக்கும்னு சொல்வாங்க. அந்த மாதிரி அடுத்தவங்களுக்குக் கொடுக்கும்போது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. நம்ம கிட்ட இருக்குற பணம் இன்னொருத்தர் கிட்ட போனா அதோட மதிப்பு ரொம்ப அதிகமாயிடும்னு சின்ன வயசில சொல்லிக் கொடுத்தாங்க. இவ்வாறு அவர் பேசினார்.

 

Related Articles

Next Story