10 ரூபாய்க்கு வயிறு முட்ட சாப்பாடு.! நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் 'உழவன்' கார்த்தி.!
தமிழ் திரையுலகில் தன்னை ஒரு நல்ல நடிகராகவும் நல்ல மனிதராகவும் நிரூபித்தவர் நடிகர் சிவகுமார் அவரைப் போலவே அவரது இரண்டு மகன்களும் நல்ல நடிகராகவும் நல்ல மனிதராகவும் சமூகத்திலும் திரை உலகத்திலும் செயல்பட்டு வருகின்றனர். இரும்புத்திரை, ஹீரோ பட என பல வெற்றிகளை கொடுத்து வரும் இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் வித்தியாசமான கதை களத்தில் இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்துவரும் படம் தான் சர்தார்.
சூர்யா "அகரம்" எனும் அறக்கட்டளை மூலம் பல்வேறு ஏழை மாணவர்களுக்கு தன்னால் முடிந்த கல்வி உதவிகளை செய்து வருகிறார் .அதேபோல நடிகர் கார்த்தி "உழவன் பவுண்டேஷன்" மூலமாக விவசாயிகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.
பத்து ரூபாய்க்கு உதவி செய்து அதை நூறு ரூபாய்க்கு விளம்பரப்படுத்தும் மனிதர்கள் வாழும் உலகில் மனிதர்களுக்கு மத்தியில் தான் செய்த உதவி 150 நாட்களை கடந்தும் தற்போது வரை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருக்கும் நல்ல மனிதர் நடிகர் கார்த்தி தாங்க அட ஆமாங்க...
இதையும் படியுங்களேன் … பழைய பகையெல்லாம் மறந்துடீங்களா ஹரி.?! மீண்டும் சீரும் சிங்கம்.!?
அவரது, உழவன் அறக்கட்டளை மூலமாக சென்னை வளசரவாக்கம் பகுதியில் பத்து ரூபாய்க்கு வயிறார நல்ல உணவை வழங்கிவருகிறார். இந்த சேவை கடந்த 150 நாட்களை கடந்தும் இன்னும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தான் இந்த தகவல் வெளியுலகத்திற்கு தெரிய வந்துள்ளது. நிச்சயம் இந்த செயல் எப்போதும் பாராட்டுக்குரியது.