அஜித் – விஜய் நடிக்க மறுத்த அந்த கதை!.. தில்லா இறங்கி சம்பவம் செஞ்ச நவரச நாயகன்…

Published on: October 12, 2023
actor karthik
---Advertisement---

Actor Karthik: மாங்கல்யம் தந்துனானே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அகத்தியன். இவர் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார். பொண்டாட்டி ராஜ்ஜியம், வான்மதி போன்ற பல திரைப்படங்களின் மூலம் திரையுலகில் தனக்கென தனி அங்கீகாரத்தை உருவாக்கினார். இவர் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் காதல்கோட்டை.

இப்படம் அஜித்தின் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. மேலும் இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை தேவயாணி நடித்திருந்தார். இப்பட வெற்றிக்கு பின் அகத்தியனின் படத்தில் நடிக்க நடிகர்கள் அனைவரும் போட்டி போட்டு கொண்டிருந்தனர் என எதிர்பார்த்தால் அப்படி ஏதும் நடக்கவில்லை.

இதையும் படிங்க:ஒரே நாள்… ரயில் பயணத்திலேயே மனோரமா செய்த ஆச்சரியப்படும் சம்பவம்… அசத்திட்டீங்களே ஆச்சி..!

காதல் கோட்டை படத்திற்கு பின் இவர் இயக்கிய படம் கோகுலத்தில் சீதை. இப்படத்தில் கார்த்திக், சுவலெட்சுமி, மணிவண்ணன் போன்ற பல முக்கிய கதாபாத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்திற்காக முதலில் இயக்குனர் அகத்தியன் நடிகர் விஜய்யிடம் பேசியுள்ளார். பொதுவாக விஜய்யின் கதைகள் அனைத்தையும் அவரது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர்தான் முடிவு செய்வார்.

ஆனால் அவர் அகத்தியன் வந்து கேட்டபொழுது தம்பிக்கு ஏற்ற கதை அல்ல இது. தம்பி எப்படி இப்படிபட்ட கதையில் நடிப்பார் என கூறி மறுத்து விட்டாராம். அதன்பின் அகத்தியன் நடிகர் அஜித்திடம் கேட்டுள்ளார். ஆனால் அஜித்தும் அப்படத்தில் நடிப்பதற்கு சம்மதம் கூறவில்லையாம். பின் பல நட்சத்திரங்களிடம் கேட்டுள்ளார் இயக்குனர் அகத்தியன். ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்லி மறுத்துவிட்டார்களாம்.

இதையும் படிங்க:பக்காவா செட்டில் ஆகப்போகும் நயன்…தமிழ் படத்துக்குதான் கிராக்கி பண்ணுவாங்க அம்மணி…

அப்போது விஜய், அஜித் போன்று முன்னணி கதாநாயகனாக இருந்தவர் நவரச நாயகன் கார்த்திக். இவரின் படங்கள் அனைத்தும் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டன. இயக்குனர் அகத்தியன் கார்த்திக்கிடம் வந்து கதை கூறினாராம். கார்த்திக்கும் உடனே அப்படத்தில் நடிக்க ஒப்பு கொண்டாராம். இந்த படத்தில் நான் நடிக்கிறேன். கண்டிப்பாக இப்படம் வெற்றி அடையும் என கூறியுள்ளார் கார்த்திக்.

பின் இவரை வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய வெற்றியை சந்தித்தது. மேலும் அதன்பின் இவர் நடிப்பில் வெளியான பிஸ்தா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்தன.

இதையும் படிங்க:‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் நடிக்க வேண்டியது இவர்தானாம்! இளையராஜாவால் வாய்ப்பை இழந்த நடிகர்

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.