Cinema History
12 தோல்வி படங்கள்!.. ஒரு ஹிட் படம் மூலம் செகண்ட் இன்னிங்ஸை துவங்கிய கார்த்திக்…
Actor Karthik: நடிகர் முத்துராமனின் மகன் கார்த்திக். பாரதிராஜாவால் அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகம் செய்யப்பட்டவர். முதல் படமே ஹிட். ரசிகர்களுக்கும் அவரை பிடித்துப்போனதால் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான மௌனராகம் படத்தில் இவர் ஏற்ற கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
எந்த நடிகரையும் காப்பி அடிக்காமல், தனக்கென ஒரு ஸ்டைல், ஒரு உடல்மொழி, தனித்துவமான நடிப்பு என ரசிகர்களை கவர்ந்தார். இவருக்கு அப்போதே பெண் ரசிகைகளும் உண்டானார்கள். பிரபு, விஜயகாந்த், ரஜினி ஆகியோரின் படங்களில் கூட அவர்களோடு சேர்ந்து நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக்கிற்குப் பதில் நடிக்க வேண்டியது இவர் தான்… வாய்ப்பு தவறியது எப்படி?
ஹீரோவாக பல படங்களில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்துள்ளார். தென்மாவட்டங்களில் விஜயகாந்துக்கு அடுத்து அதிக ரசிகர்களை கொண்டவராக கார்த்திக் இருந்தார். ஆனால், படப்பிடிப்புக்கு சரியாக செல்லாமல் தயாரிப்பாளர்களின் அதிருப்திக்கு உள்ளானார். படப்பிடிப்புக்கு எப்போதுமே தாமதமாகவே செல்வார்.
இதனாலேயே அவரை வைத்து படமெடுக்க இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தயங்கினார்கள். பொண்ணுமணி திரைப்படத்திற்கு பின் அவருக்கு ஹிட் படம் அமையவில்லை. தொடந்து 12 தோல்வி படங்களை கொடுத்தார். எனவே, அவரின் மார்க்கெட் மொத்தமாக காலியானது. அப்போதுதான் சுந்தர் சி.யின் இயக்கத்தில் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நடித்தார்.
இதையும் படிங்க: அந்த நேரத்தில் கார்த்திக்கு உதவிய நடிகர்!.. நன்றி மறக்காமல் நவரச நாயகன் செய்த அந்த சம்பவம்!…
இந்த படம் அவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அதன்பின் அவருக்கு செகண்ட் இன்னிங்ஸ் துவங்கியது. மீண்டும் பல படங்களில் நடித்தார். அதன்பின் சுமார் 10 வருடங்கள் கார்த்திக்கின் மார்க்கெட்டை யாராலும் அசைக்க முடியவில்லை. ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல் அஜித் நடித்த ஆனந்த பூங்காற்றே படத்தில் சின்ன வேடத்திலும் நடித்தார்.
இப்போது அவரை சினிமாவில் அதிகம் பார்க்க முடியவில்லை. புதுப்புது நடிகர்கள் வந்துவிட்டனர். கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் சினிமாவில் நடிகராகி விட்டார். ஆனால், இன்னமும் கூட கார்த்திக்கின் இடம் காலியாகவே இருக்கிறது. அவரைப்போன்ற ஒரு ச்சார்ம் ஹீரோவை திரையுலகம் பார்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இதையும் படிங்க: அவரால் தான் எனக்கு இந்த கொடுமை… அவர் சந்தோஷமா தான் இருந்தார்.. தந்தையை வறுத்தெடுக்க கௌதம் கார்த்திக்!