கிரேஸோட ஒரே பாட்டுல மயங்கிய கருணாஸ்… அதுக்காக இப்படியா காதலை சொல்லுவீங்க!…

Actor Karunas: கருணாஸ் தமிழ் சினிமா காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவர். இவர் தமிழில் நந்தா திரைப்படத்தில் லொடுக்கு பாண்டி எனும் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். பின் வில்லன், திருடா திருடி, பிதாமகன் போன்ற பல திரைப்படங்களின் மூலம் பிரபலமானார்.
இவர் சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். ஆனால் இவை அனைத்தும் இவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. திண்டுக்கல் சாரதி, ரகளபுரம், அம்பா சமுத்திரத்தில் ஒரு அம்பானி போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
இதையும் வாசிங்க:மரணத்தை எதிர்பார்த்து கொண்டிருந்த நாகேஷ்… ரகசியத்தை உடைக்கும் பிரபல நடிகை…
பின் அரசியல் மீது ஆர்வம் கொண்ட இவர் பல தேர்தல்களில் போட்டியிட்டார். இவர் பிரபல பாடகியான கிரேஸை திருமணம் செய்து கொண்டார். இவர்களில் திருமணம் காதல் திருமணமாம். இவர் கிரேஸிடன் தனது காதலை மிக வித்தியாசமாக தெரிவித்தாராம்.
இவர் முதன்முதலில் தனக்கென தனி பேண்ட் வைத்து கொண்டு இசையமைப்பவராகதான் இருந்தாராம். அதுதான் இவரது ஆசையும் கூட. பல லைவ் கான்செர்ட்டுகளுக்கு சிறப்பு விருந்தினராக செல்வாராம். அப்போது ஒரு கல்லூரி கலை நிகழ்ச்சிக்கு சென்ற போது அங்கு கிரேஸ் பூ பூக்கும் ஓசை.. அதை கேட்கதான் ஆசை… பாடலை பாடினாராம். அந்த சமயத்தில்தான் இவருக்கு கிரேஸ் மீது காதல் வந்ததாம்.
இதையும் வாசிங்க:நடிக்க ஓகே சொன்ன சிவாஜி.. ஆனாலும் ரிஜெக்ட் செய்த சேரன்!.. இதுதான் காரணமா?..
பின் கிரேஸும் இவருக்கு பழக்கமானாராம். அப்போது ஒரு நாள் இவர் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பைக்கை நிறுத்தி ‘கிரேஸ் எனக்கு உன்னிடம் ஒன்று சொல்லணும் போல இருக்கு… எனக்கு உன்னை புடிச்சிருக்கு… உன்னை கல்யாணம் பண்ணினா நல்லா இருக்கும்னு நினைக்குறேன்.. நீ என்னை வேணாம்னு சொன்னா நான் அதுக்காக ஃபீல் பண்ண மாட்டேன்.. வேறா ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிப்பேன்’ என கூறினாராம்.
ஆரம்பத்தில் இவரது காதலை நிராகரித்த கிரேஸ் பின் ஓகே சொல்லிவிட்டாராம். ஆனால் இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு ஏற்பட்டதாம். பின் ஒரு வழியாக திருமணமும் செய்து கொண்டனராம். இவ்வாறு இவர் தனது காதல் கதையை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இதையும் வாசிங்க:ஒரு பாட்டுக்கு 20 நாட்கள் அலையவிட்ட கண்ணதாசன்… கடுப்பான பி.எஸ்.வீரப்பா.. கடைசியில் செம ட்விஸ்ட்டு..!