300 ரூபாய் சம்பளத்துக்காக உயிரை விட்ட நடிகர்! இவர் மட்டும் இல்லைனா அந்த கவுண்டமணி காமெடி எடுபடுமா?
Karuppu Subbaiya: 80 90களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர்கள் கவுண்டமணி செந்தில். காமெடி காட்சிகளில் இவர்களை அடிச்சுக்க அந்த காலத்தில் யாருமே இல்லை. அந்த அளவுக்கு இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை. அதில் கவுண்டமணி இடம் செந்தில் பல ஆண்டுகளாக அடி வாங்கியே காமெடி காட்சிகளில் நடித்து புகழ்பெற்றார்.
இப்படி ஒரு காம்போவை இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் ரசித்தது இல்லை. இன்றுவரை கவுண்டமணி செந்தில் இருவரையும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அவர்கள் சமீப காலமாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் 2கே கிட்ஸ் விரும்பும் காமெடி நடிகர்களாகவும் இவர்கள் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் இவர்களுடன் நடித்த ஒரு காமெடி நடிகர் 300 ரூபாய் சம்பளத்துக்காக உயிரையே விட்ட ஒரு சம்பவம் தான் இப்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க: உன்னால நான் கெட்டேன்!.. அவனால நீ கெட்ட!.. என்னடா தனுஷ், சியான் விக்ரமுக்கு வந்த சோதனை!..
தமிழ் சினிமாவில் கருப்பு சுப்பையா என்ற ஒரு காமெடி நடிகரை யாரும் அவ்வளவு சீக்கிரமாக மறந்திருக்க முடியாது. சுப்பையா என்ற பெயரில் அப்போது இருவர் இருந்ததால் தன் அடையாளத்திற்காக கருப்பு சுப்பையா என தன் பெயரை மாற்றிக் கொண்டார். பெரிய மருது, கட்டபொம்மன் உள்ளிட்ட பல படங்களில் கவுண்டமணி செந்தில் உடன் சிறு சிறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர்.
அதிலும் பெரிய மருது படத்தில் இவருடைய அந்த காமெடி காட்சியை யாரும் மறந்து விட முடியாது. அந்தப் படத்தில் கவுண்டமணியும் செந்திலும் ஈயம் பூசும் தொழிலாளியாக நடித்திருப்பார்கள். ஒரு காட்சியில் பித்தளை பாத்திரத்திற்கு ஈயம் பூசுவது என சொல்லிக் கொண்டே கவுண்டமணியும் செந்திலும் தெருவில் நடந்து வர அப்போது கருப்பு சுப்பையா ஒரு அண்டாவுக்கு எவ்வளவு இரண்டு அண்டாவுக்கு எவ்வளவு என்பது போல கேட்கும் காட்சியில் நடித்திருப்பார்.
இதையும் படிங்க: ஓடிடியில் ஒடைஞ்சு போன கவின் இமேஜ்!.. நெல்சன் கழுத்துல தொங்குது பெரிய கத்தி!.. என்ன பண்ண போறாரோ?..
கடைசியில் ஒரு சின்ன பாத்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு முதலில் இதை பூசி தரும்படியும் அண்டா எல்லாம் அடகு கடையில் இருப்பதால் அடுத்த வருடம் அதை மீட்டு தருகிறேன். அடுத்த வருடம் வந்து அந்த அண்டாவுக்கு எல்லாம் ஈயம் பூசி கொடு என சொல்வது மாதிரியும் அந்த காட்சியில் நடித்திருப்பார் .இதில் கடுப்பான கவுண்டமணி உன் மூஞ்சியை பார்க்கும் போதே அப்பவே நான் புரிஞ்சுகிட்டேன்.
அடுத்த வருடம் வரைக்கும் என்னால காத்திருக்க முடியாது. வா உனக்கே நான் ஈயம் பூசுகிறேன் என அவரை குனிய வைத்து ஈயம் பூசி விடுவார். அப்போது அவர் உடம்பெல்லாம் வெளிர் பெயிண்ட் அடித்தார் போல இருக்கும். ஆனால் அந்த காட்சியில் நடிப்பதற்காக உண்மையிலேயே கருப்பு சுப்பையா தன் உடம்பு முழுவதும் பெயிண்ட் அடித்துக் கொண்டு நடித்தாராம் .அப்போது அந்தப் படத்தில் அவருக்கு சம்பளம் 300 ரூபாயாம். இந்த காட்சியில் பெயிண்ட் அடித்து நடித்ததனால் அதிலிருந்து அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் 2013 ஆம் ஆண்டு அவர் மரணம் அடைந்தார் என செய்தி கூறப்படுகிறது.