ரெண்டு படம் ஹிட்டுன்னா இப்படியா?!.. ஓவர் சீன் போடும் கவின்!.. அடக்கி வாசிங்க புரோ!..
Actor Kavin: விஜய் டிவி சீரியல்களில் நடித்து அப்படியே சினிமாவுக்கு வந்த சில நடிகர்களில் கவினும் ஒருவர். கனா கானும் காலங்கள், தாயுமானவன், சரவணன் மீனாட்சி சீசன் 1 மற்றும் சீசன் ஆகிய சீரியல்களில் நடித்தார். இந்த சீரியல்கள் அவரை பலரிடம் பிரபலப்படுத்தியது.
சீரியலில் நடிப்பதற்கு முன்பே பீசா, இன்றே நேற்று நாளை, சத்ரியன் ஆகிய திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடம் நல்ல பெயரை பெற்றார். அந்த வீட்டில் நடன இயக்குனர் சாண்டியுடன் இணைந்து இவர் அடித்து கூத்துக்கு அளவே இல்லை.
இதையும் படிங்க: தனுஷை டீலில் விட்ட ராஷ்மிகா மந்தனா!.. அதனாலதான் இப்படி ஆகிப்போச்சோம்!..
அதோடு, அந்த வீட்டில் போட்டியாளராக வந்த லாஸ்லியாவுடன் ரொமான்ஸ் செய்தார். திடீரென நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் இவரின் நடிப்பில் வெளியான ‘லிப்ட்’ திரைப்படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அதேபோல், இவர் நடித்த டாடா திரைப்படத்தின் வெற்றி இவரை மார்க்கெட் உள்ள ஒரு ஹீரோவாக மாற்றிவிட்டது.
ஒருபக்கம், இப்படத்தின் வெற்றி கவினின் சுபாவத்தையும் மாற்றிவிட்டதாக சொல்லப்படுகிறது. படப்பிடிப்பு தளத்தில் அடக்கி வாசிக்கும் கவின் இப்போதெல்லாம் எல்லாவற்றிலும் தலையிடுகிறாராம். அது சரியில்ல்லை. இது சரியில்லை.. அதை மாற்றுங்கள்.. இதை மாற்றுங்கள் என இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு குடைச்சல் கொடுத்து வருகிறாராம்.
இதையும் படிங்க: அட்லியியை அலேக்கா தூக்கிய சன் பிக்சர்ஸ்!.. போட்டி போடும் இரண்டு ஹீரோக்கள்!…
இது அவரை வைத்து படமெடுக்கும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இப்போது ஸ்டார் என்கிற படத்தில் நடித்து வருகிறது. அந்த படத்தின் படப்பிடிப்பிலும் கவின் கொடுக்கும் டார்ச்சர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலைவலியை கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
சில நடிகர்கள் இப்படித்தான். ஒரு வெற்றியை கொடுத்துவிட்டால் தலை கால் புரியாது. ஓவர் ஆட்டம் போடுவார்கள். சம்பளத்தை தாறுமாறாக சம்பளத்தை உயர்த்தி விடுவார்கள், கவினும் இதைத்தான் செய்து வருகிறார். ஒரு தோல்வி படத்தை கொடுத்தால் அடங்கிவிடுவார் என திரையுலகில் பேச துவங்கிவிட்டனர்.
இதையும் படிங்க: ரச்சிதாவுக்கு இருக்கும் நூதன நோய்..! இதனால் தான் தினேஷுடன் விவகாரத்தா?