தலய பார்ப்பேனு நினைக்கல! அஜித்துடனான மீட்டிங்கை பற்றி கூறிய கவின்

by Rohini |   ( Updated:2024-09-16 10:20:53  )
kavin
X

kavin

Ajith Kavin: தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் நடிகர் கவின். சின்னத்திரை தொலைக்காட்சி மூலம் அறிமுகமான கவின் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்தார். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் பேராதரவை பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தன.

அதிலும் அந்த நிகழ்ச்சியில் அவர்தான் டைட்டில் வின்னர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென 5 லட்சம் பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியேறி விட்டார் கவின். அப்பவே மக்களின் மனதை வென்றார் கவின். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு டாடா, லிஃப்ட் போன்ற படங்களில் நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறினார். அவர் நடித்த இரண்டு படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றன.

இதையும் படிங்க: அஜீத் ஏன் விஜய்க்குப் போட்டியா அதை செய்யவில்லை? பிரபலம் சொன்ன ஆச்சரிய பதில்!

சூப்பர் ஹிட் திரைப்படங்களாகவும் மாறின. அதன் பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வரும் கவின் நேற்று நடந்த சைமா விருது விழாவில் மோஸ்ட் ப்ராமிசிங் நடிகர் என்ற பிரிவில் ஒரு விருதை வாங்கி இருக்கிறார். அப்போது மேடையில் பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார் கவின். அதில் நேற்று முன்தினம் அஜித்துடன் இருக்குமாதிரியான புகைப்படம் வெளியானது பற்றி கவினிடம் கேட்டனர்.

அதைப்பற்றி கூறிய கவின் நானும் நெல்சனும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தோம். அந்த வழியாக அஜித்தை பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. பார்த்தோம் பேசினோம். என் வாழ்க்கையில் எதிர்பாராத நிகழ்வு அது. ஒரு கேசுவலான மீட்டிங்காக இருக்கும் என நான் நினைக்கவில்லை. 10 செகண்ட் தான். பேசிவிட்டு தல பாய் சொல்லிவிட்டு போய்விட்டார்.

இதையும் படிங்க: தளபதி 69க்கு சம்பளம் 275 கோடியா?!. இது விஜய்க்கு தெரியுமா?… கலாய்க்கும் பிரபலம்!…

அந்த ஒரு சந்தோஷத்தில் இருந்து நான் வெளியே வரவே நீண்ட நேரம் ஆனது என கவின் கூறி இருக்கிறார் .அவர் சொன்னதைப் போல திடீரென அஜித்துடன் கவின் இருக்குமாதிரியான புகைப்படம் வெளியானதும் ரசிகர்களுக்கு ஒரே அதிர்ச்சி. எப்படி எதிர்பாராத விதமாக அஜித்தை சந்தித்தார் கவின் என்ற வகையில் ரசிகர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர். அதிலும் உடன் நெல்சன் வேற இருந்தார். ஆனால் அது கேஷுவலாகவே நடந்த விஷயம் என்பது கவின் கூறிய பிறகு தான் தெரிந்தது.

Next Story