வடிவேலுவுக்கு யாரையும் புடிக்காது!.. என்னை பாத்தாலே பயப்படுவாரு!.. நக்கலடிக்கும் காமெடி நடிகர்..

by Rohini |   ( Updated:2024-01-15 10:43:41  )
vadi
X

vadi

Actor Vadivelu: தமிழ் சினிமாவில் வடிவேலு ஒரு மாபெரும் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் ஒரு துணை காமெடி நடிகராக இருந்த வடிவேலு இப்போது அனைவரும் அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார்.

ராஜ்கிரணால் இந்த சினிமாவிற்கு அறிமுகமானாலும் விஜயகாந்த் மூலம் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வடிவேலுவுக்கு வர அதன் மூலமும் மிகவும் பிரபலமானார் வடிவேலு. வைகைப்புயல் என அன்போடு அழைக்கப்பட்ட வடிவேலு சில பல பிரச்சினைகளால் நடிக்க முடியாமல் சில ஆண்டுகள் இருந்தார்.

இதையும் படிங்க: என்ன செல்லம் இப்படி மாறிட்ட!.. பாதி கிழிச்ச டிரெஸ்ல பலான போஸ் தந்த சீரியல் நடிகை…

அதன் பிறகு தடைகளைத் தாண்டி நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் கம்பேக் கொடுக்க அந்தப் படம் சரியாக ஓடவில்லை. அதனால் ரசிகர்கள் முன்பு இருந்த வடிவேலுவை இனிமேல் பார்க்க முடியாது என்று கூறி கிண்டலடித்து வந்தார்கள்.

அதுமட்டுமில்லாமல் அவருடன் நடிக்கும் சக நடிகர்களிடமும் அவர் மரியாதை குறைவாக நடந்து கொள்வதாகவும் தரக்குறைவாக பேசுவதாகவும் யாருக்கும் எந்தவொரு உதவியும் செய்யவில்லை என்றும் பல விமர்சனங்கள் எழுந்தன.

இதையும் படிங்க: ரஜினிகாந்துடன் நேரடியாக மோதிய 25 பாக்யராஜ் படங்கள்… ஜெயித்தது யாரு தெரியுமா?

இந்த நிலையில் காமெடி நடிகர் கொட்டாச்சி வடிவேலுவை பற்றி ஒரு விஷயத்தை பகிர்ந்தார். வடிவேலுவுடன் கொட்டாச்சி ஃபிரெண்ட்ஸ் என்ற படத்தில் நடித்தாராம். ஆனால் வடிவேலுவுக்காகவோ அல்லது வேறு யாருக்காகவோ நடிக்கவில்லையாம். சித்திக்காகத்தான் நடித்தாராம்.

அப்பவே வடிவேலு ஒரு மாதிரிதான் நடந்து கொண்டாராம். அதன் பிறகு சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் வடிவேலுவை சந்திக்கும் வாய்ப்பு மறுபடியும் கொட்டாச்சிக்கு ஏற்பட்டிருக்கிறது. கொட்டாச்சியை பார்த்ததும் வடிவேலுவுக்கு ஷாக் ஆகிவிட்டதாம்.

இதையும் படிங்க: அந்த விஷயத்துல அந்த நடிகையை அடிச்சிக்கவே முடியாது!.. புகழ்ந்து தள்ளிய கண்ணதாசன்…

என்னடா மறுபடியும் நடிக்க வந்துட்டானா? என்ற எண்ணத்திலேயே பார்த்த வடிவேலு என்னப்பா இந்தப் பக்கம் ? நடிக்கிறீயா? என கேட்க அதற்கு கொட்டாச்சி ‘என் மகள் இந்தப் படத்தில் நடிக்கிறாள்’ என சொன்னாராம். பழைய நடிகர்கள் நடிக்க வருவது அவருக்கு கொஞ்சம் பயத்தைத்தான் ஏற்படுத்தும் என்றும் கொட்டாச்சி கூறினார்.

Next Story