Cinema News
அஜித் சார ஒருமணி நேரம் வெயிட் பண்ண வச்சு நான் பட்டபாடு! படப்பிடிப்பில் பதறிப்போய் ஓடிய நடிகர்
தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் ஹீரோ, ஹீரோயின்களைத் தாண்டி கூட நடிக்கும் ஒரு சில துணை நடிகர்கள், நடிகைகளை மறக்கவே முடியாது. அப்படி பட்ட ஒரு நடிகர் தான் நடிகர் கிருஷ்ணா. சொல்லப்போனால் சிம்பு நடித்த சரவணா திரைப்படத்தில் சிம்புவுக்கு நண்பராக வருவார்.
சண்டக்கோழி, அறிந்தும் அறியாமலும், ஆயுத எழுத்து போன்ற பல படங்களில் இவர் துணை நடிகராக நடித்தவர். மேலும் அந்தந்த மொழி பாஷைகளில் பேசி நடிக்க கூடிய சிறந்த நடிகர்தான் கிருஷ்ணா. ஆனால் நடிப்பை தவிர்த்து கிருஷ்ணாவுக்கு இயக்குனராக வேண்டும் என்று தான் ஆசையாம்.
இதையும் படிங்க : ரஜினியை பார்த்து ‘தலைவா’ என்று கத்திய மூன்று வயது சிறுவன்! தனஞ்செயன் பெருமிதம் – சவுக்கடி கொடுத்த ப்ளூசட்டை மாறன்
ஆயுத எழுத்து படத்தில் கூட நடிக்கும் போது மணிரத்தினத்தினை படாதபாடு படுத்திவிட்டாராம். அப்போது நினைத்தாராம். கார்த்தி இருக்க வேண்டிய இடத்தில் அல்லவா நாம் இருக்கவேண்டும், ஆனால் நாம் இருக்கும் இடமே வேறயே என்று நினைத்தாராம்.
அந்தப் படத்தில் கார்த்தி மணிரத்தினத்திற்கு உதவி இயக்குனராக பணிபுரிந்திருப்பார். அதுமட்டுமில்லாமல் அவர் நடித்த படங்களில் பெரும்பாலும் கிருஷ்ணா என்ற கதாபாத்திரத்திலேயே நடித்திருப்பார்.
இந்த நிலையில் ஆரம்பம் படத்திலயும் கிருஷ்ணா நடித்திருப்பார். நயன் தாரா, அஜித் ப்ளாஷ்பேக்கில் கண்ணாடிப் போட்டுக் கொண்டு மொட்டைத் தலையுடன் வருவார். அந்தப் படத்தில் நடிக்கும் போது கூட அஜித், நயன், ஆர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளில் கிருஷ்ணா ஒரு மணி நேரம் தாமதமாக வந்தாராம்.
இதையும் படிங்க : குக் வித் கோமாளியில் கலந்து கொண்டது இவரால் தான்… வலிமை ஷூட்டிங்கில் ஒரே சண்டை… ஷாக் கொடுக்கும் கிரண்
அது வரைக்கும் அஜித் செட்டில் காத்துக் கொண்டுதான் இருந்தாராம். அப்போதே நினைத்தாராம். இந்த நடிப்பு நமக்கு செட்டே ஆகாது என்று நினைத்து இப்போது இயக்குனர் ஆகும் எண்ணத்தில் இருக்கிறாராம் கிருஷ்ணா.