யார் என்ன சொன்னாலும் பரவாயில்ல… அவன்தான் மனுஷன்… அவன்தான் ஆக்டர்… விவேக் பற்றி குமரிமுத்து

kumari muthu, vivek
நடிகர் விவேக்கை சின்னக் கலைவாணர்னு சொல்வாங்க. நகைச்சுவை உணர்வுடன் சிந்திக்கவும் செய்வதில் அவரைப் போல விவேக் வல்லவர். அப்துல் கலாமின் வழியில் மரக்கன்றுகளை நட்டவர். அவரிடம் உதவி கேட்பவர்களுக்கு தன்னால் முடிந்ததைச் செய்யக்கூடிய மனம் படைத்தவர். ஒரு சின்ன சம்பவத்தைப் பார்க்கலாமா…
நடிகர் குமரிமுத்து தன் பொண்ணோட கல்யாணத்துக்காக பணம் இல்லாமல் என்ன செய்வதுன்னு திணறினார். அப்போது விவேக் அவருக்கு செய்த உதவி குறித்து நகைச்சுவை நடிகர் குமரிமுத்து நெகிழ்ச்சியாக இப்படி தெரிவித்துள்ளார்.
கலைவாணருக்குப் பிறகு நான் துணிஞ்சி சொல்றேன். யாரு என் மேல கோவிச்சிக்கிட்டாலும் பரவாயில்ல. எந்த நகைச்சுவை நடிகர் கோவிச்சிக்கிட்டாலும் பரவாயில்ல. என் கையில காசு கிடையாது.

தம்பி விவேக் கிட்ட போயி சிலோன்ல ஒரு நாடகத்தைப் போடுறாங்க. அதுக்குப் போனா என் பொண்ணு கல்யாணத்துக்கு ஒரு 50ஆயிரம் ரூபாய் கிடைக்கும். எனக்கு எவ்வளவு தருவீங்கன்னு கேட்குறார. 2 லட்ச ரூபாய் வாங்கித் தரேன்னு சொன்னதும் சரி டிக்கெட் போடுன்னு சொல்றாரு. பிளைட்டுக்கு டிக்கெட் போட்டாச்சு.
நாடகமும் முடிஞ்சிப் போச்சு. மறுநாள் சாயங்காலம் வந்து கரெக்டா எனக்கு 50 ஆயிரம் கொடுத்தாங்க. ரொம்ப சந்தோஷம். அவரு ரூமைக் காட்டுங்கன்னாங்க. நான் அழுதுட்டேன். என் வாழ்க்கையிலயே சந்தோஷத்துல அழுதது அன்னைக்குத் தான். 2லட்ச ரூபாயை பிரசாந்த் விவேக்கிட்ட கொடுக்கிறாரு. அதை அப்படியே அவரு என்கிட்ட தாராரு. அண்ணேன் இந்தாங்கண்ணேன்.
இந்த ரெண்டு லட்ச ரூபாயை வச்சிக்கோங்க. உங்க பொண்ணு கல்யாணத்துக்கு வச்சிக்கோங்க. உங்களுக்கு 50 ஆயிரம் ரூபாயைக் கொடுத்துட்டாங்களா. உங்க பொண்ணு கல்யாணத்தை நல்லபடியா நடத்துங்க. உங்க பொண்ணு கல்யாணத்துக்காக கஷ்டப்படுவீங்களேன்னுதான்னு தான் தாரேன்னு சொல்றாரு.
என் வாழ்க்கையிலயே கலைவாணருக்குப் பிறகு அவன்தான் சார் மனுஷன். அவன்தான் சார் ஆக்டர் என்று கண் கலங்குகிறார் குமரிமுத்து.