Cinema History
அப்பா ஸ்தானத்தில் இருந்தவரு எம்ஜிஆர்! அவர் ஆசையை குழி தோண்டி புதைச்சிட்டேன்
தமிழ் சினிமாவில் மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்ட நடிகராக இருந்தவர் பொன்மனச்செம்மல் எம்ஜிஆர்.அறிஞர் அண்ணாவின் பாசத்தை பெற்றதால் அண்ணாவால் இதயக்கனி என்ற பட்டத்தையும் பெற்றார் எம்ஜிஆர். மேலும் அண்ணாவால் அதிகம் ஈர்க்கப்பட்டுதான் அரசியலிலும் குதித்தார் எம்ஜிஆர்.
தான் நடிக்கும் படங்களின் மூலம் மக்களுக்கு பல நல்ல நல்ல செயல்கள் சென்றடைய வேண்டும் என விரும்பினார். அதனாலேயே சாதாரண மக்கள் முதல் செல்வாக்கு மிக்கவர்கள் வரை அனைவரின் செல்வாக்கையும் பெற்று விளங்கினார் எம்ஜிஆர்.
இந்த நிலையில் எம்ஜிஆர் போன்ற பல நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து பேர் எடுத்தவர் குண்டு கருப்பையா. எம்ஜிஆரின் அபிமானத்தை பெற்றவர். அவர் மறைவிற்கு பிறகு குண்டு கருப்பையாவின் குடும்பத்தையே தத்தெடுத்துக் கொண்டாராம் எம்ஜிஆர்.
இதையும் படிங்க : களமிறங்கும் இளைய தளபதி… ஜேசன் சஞ்சயின் இண்ட்ரோ வேற லெவலால இருக்கு!
மூன்று மகன்களில் மூத்த சகோதரரை தன்னுடனேயே வைத்து கொண்டாராம் எம்ஜிஆர். இரண்டாவது சகோதரரை அரசியலில் பயன்படுத்திக் கொண்டாராம். மூன்றாவது மகனான குண்டு கல்யாண் இவரும் ஒரு நடிகர்தான். ஆனால் அவரை ஒரு மருத்துவராக்கி பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டாராம் எம்ஜிஆர்.
அதற்கான படிப்பு செலவுகளை ஆரம்பத்தில் இருந்தே எம்ஜிஆர் தான் கவனித்துக் கொண்டாராம். அதன்பின் தொலைக்காட்சி மோகம் குண்டு கல்யாணை படிப்பிலிருந்து பிரித்தததாம். நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தாராம். முதன் முதலில் பாலசந்தரின் நாடகத்தில் நடித்திருக்கிறார்.
அதன் பின் முதன் முறையாக அவன் அவள் அது என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானாராம். ஆனால் அது எம்ஜிஆருக்கு தெரியவே தெரியாதாம். அந்தப் படத்தில் நடிக்கும் போதே வேறொரு படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்ததாம். இதை எம்ஜிஆரிடம் எப்படியாவது தெரியப்படுத்த வேண்டும் என விரும்பிய குண்டு கல்யாணம் ஒரு விழாவிற்கு வந்த எம்ஜிஆரிடம் சொல்லியிருக்கிறார்.
அவ்ளோதான். இதை கேட்ட எம்ஜிஆர் தன் கோபக்கண்களால் அனல் தெறிக்க வைத்திருக்கிறார். அதன்பின் எம்ஜிஆரை குண்டு கல்யாணம் பார்க்கவே இல்லையாம். முக்தா ஸ்ரீனிவாசன் தயாரித்த ஒரு படத்தில் குண்டு கல்யாணம் நடித்தாராம். முக்தா ஸ்ரீனிவாசனை பொருத்தவரைக்கும் அவர் எடுக்கும் எந்தவொரு படமானாலும் முதலில் எம்ஜிஆர் பார்க்க வேண்டுமென நினைப்பாராம்.
இதையும் படிங்க : கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்… எரிச்சலாகி கத்திய ரஜினிகாந்த்.. சூப்பர் அட்வைஸ் சொன்ன இயக்குனர்!
அதனால் அந்தப் படத்தை எம்ஜிஆருக்கு போட்டுக்காட்டியிருக்கிறார். எம்ஜிஆரும் அவரது மனைவி ஜானிகி அம்மாளும் படத்தை பார்க்க குண்டு கல்யாணம் வரும் காட்சிகளை பார்த்து எம்ஜிஆர் விழுந்து விழுந்து சிரித்தாராம். அதன் பின் குண்டு கல்யாணத்தை தொலைபேசியில் அழைத்து பேசிய ஜானகி அம்மாள், ‘எம்ஜிஆர் படத்தை பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டார் என்றும் நீ இன்னும் நன்றாக வருவாய் என்றும் பாராட்டினார்’ என்று குண்டு கல்யாணத்திடம் கூறினாராம். இதை ஒரு பேட்டியில் குண்டு கல்யாணம் கூறினார்.