கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்… எரிச்சலாகி கத்திய ரஜினிகாந்த்.. சூப்பர் அட்வைஸ் சொன்ன இயக்குனர்!

தற்போது ரஜினிகாந்த் அமைதியாக செய்தியாளர்களை சந்தித்து பேசுகிறார். ஆனால் ஒரு காலத்தில் அவரிடம் அத்தனை ஆக்ரோஷம் இருக்கும். எல்லாத்துக்குமே அவ்வளவு கோபப்படுவார். அப்படி இருக்கும் அவருக்கு அப்போதைய சூப்பர் இயக்குனர் ஒரு அறிவுரை கூறினாராம். அதன் பிறகே தன்னை மாற்றி இருக்கிறார்.

எண்ணிக்கையில் கம்மியான படங்களினை இயக்கினாலும் தரமான படங்களை இயக்குவதில் வல்லவர் தான் இயக்குனர் மகேந்திரன். அவரின் ஆகச்சிறந்த படைப்பாக பார்க்கப்படும் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான முள்ளும் மலரும் படம்.

இதையும் படிங்க: ரஜினியை சாதாரணமா நினைச்சிட்டு இருக்காங்க! அவர் வாய்முகூர்த்தம் – இப்ப வரைக்கும் நடக்குது – நெகிழ்ச்சியில் தேவா

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான மங்கா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகை லதா. கமிட்டாகி அட்வான்ஸ் கொடுக்க இருந்த நேரத்தில் லதா படத்தில் இருந்து எம்.ஜி.ஆரின் அறிவுருத்தலின் பேரில் நீக்கப்படுகிறார். இதற்கு முன்னர் ரஜினியின் ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் அவரின் தங்கையாக லதா நடித்திருப்பார்.

அப்போதில் இருந்து இருவருக்கும் காதல், கிசுகிசு என செய்திகள் வெளிவருகிறது. இந்த நேரத்தில் முள்ளும் மலரும் படத்தில் இருந்து லதா நீக்கப்பட்டது. பல செய்தித்தாளில் பரபரப்பாக பேசப்படுகிறது. தொடர்ச்சியாக ரஜினியின் சூழ்ச்சி தான் இது எனக் கூறப்படுகிறது. அதிலும் எம்.ஜி.ஆரின் ஆசிப்பெற்ற ஒரு செய்தித்தாள் ரஜினி-லதா காதலை தொடர்ச்சியாக செய்தியாக்குகிறது.

இதையும் படிங்க: ரியல் லைஃப் ரோமியோ-ஜூலியட்… லவ்வில் பிணைந்த ஐஸ்வர்யா-சல்மான்கான்… ப்ரேக்அப் எப்படி ஆச்சு தெரியுமா?

இந்தநேரத்தில் ரஜினியின் குன்னூர் படப்பிடிப்புக்கே அவரை நேரில் போய் கேள்வி கேட்கின்றனர். இதில் ரஜினிக்கு செம கடுப்பு அதிகமாகி கத்தி விடுகின்றனர். என்ன ஏன் எப்போதும் தொல்லை செஞ்சிக்கிட்டே இருக்கீங்க என சண்டை போட துவங்கி விடுகிறார். இதையடுத்து படப்பிடிப்பில் இருந்த சிலர் ரஜினியை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்து வருகின்றனர்.

பின்னர் அவரிடம் இயக்குனர் மகேந்திரன், ரஜினி இது எல்லா வளரும் நடிகர்களுக்குமே நடக்கும் விஷயம் தான். இப்படி நடக்கும்போது அதை கண்டுக்கொள்ளாமல் சென்று விடுங்கள். உங்களை பற்றி பேசினாலே நீங்கள் வளர்ந்து கொண்டே இருக்கிறீர்கள் என்பது தான் உண்மை என அட்வைஸ் செய்கிறார்கள். அதன் பிறகே புரிந்துகொண்ட ரஜினி, தன்னுடைய அனுபவத்தில் மூத்தவர் பேச்சை கேட்டு கோபத்தினை மட்டுப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

 

Related Articles

Next Story