கேப்டன் மகனுக்கு விஜய் செய்யாததை செய்யும் ராகவா லாரன்ஸ்.. பெரிய மனசுதான் பாஸ்!..

by Rohini |   ( Updated:2024-01-10 07:55:46  )
viji
X

viji

Actor Ragava Lawrence: தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர் நடிகர் ராகவா லாரன்ஸ். டான்ஸ் மாஸ்டராக, நடிகராக, இயக்குனராக என பல முகங்கள் கொண்ட ஒரு நல்ல கலைஞராக இந்த சினிமா துறையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சினிமாவையும் தாண்டி சமூக பொறுப்புள்ள நல்ல மனிதராகவும் லாரன்ஸ் திகழ்கிறார். தனியாக ஒரு அறக்கட்டளை நிறுவி ஊன முற்றோர்களுக்காக அவர்களுக்கு தேவையானதையும் வழங்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவ்வப்போது டான்ஸ் ஷோக்களுக்கும் அழைத்துச் சென்று அவர்களை ஆட வைத்து அழகும் பார்க்கிறார்.

இதையும் படிங்க: வடிவேல் காமெடி பாத்துட்டுதான் தூங்குறேன்!.. வேற வழியில்ல!. அட சொன்னதே கேப்டன்தான்!.

அதோடு நிவாரண நிதியாக, அல்லது சினிமாவில் நலிவடைந்தவர்களுக்காக என தானாக முன்வந்து ஏகப்பட்ட உதவிகளை செய்து வரும் லாரன்ஸ் சமீபத்தில் விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவருடைய இல்லத்திற்கு சென்றார்.

அப்போது பிரேமலதா , அவருடைய மகன்கள், சுதீப் மற்றும் அவருடைய தங்கை என அனைவரும் இருந்தார்களாம். தன் தாயுடன் சென்றிருந்த லாரன்ஸிடம் பிரேமலதாவின் சகோதரி ‘சார், சண்முகப்பாண்டியன் சினிமாவில் இருக்கிறான். அவனை இனிமேல் நீங்கள் எல்லாரும்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: ஆசையாய் கமலை இயக்க போன ஹெச்.வினோத்!… இதெல்லாம் கதையா? கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா?

இதை கேட்டதும் லாரன்ஸுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டதாம். எத்தனை பேருக்கு உதவியவர் விஜயகாந்த்?. எத்தனை பேரின் வளர்ச்சிக்கும் காரணமாக இருந்திருக்கிறார்? அந்த சகோதரி அப்படி சொன்னதும் நாமும் கண்டிப்பாக சண்முகப்பாண்டியனுக்காக எதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன்.

அவர் இப்போது ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தை நல்ல முறையில் ப்ரோமோட் செய்ய வேண்டும். நாம் எல்லாரும் சேர்ந்து சண்முகப்பாண்டியனுக்கு சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடிப்பதற்கான ஒரு வழியை ஏற்படுத்தி தரவேண்டும்.

இதையும் படிங்க: இத விட யாரும் பண்ண முடியாது! பூர்ணிமாவை ட்ரோல் செய்து வீடியோ போட்ட சீசன்6ன் ஃபேவரைட் போட்டியாளர்

முடிந்தால் அந்தப் படக்குழு சம்மதித்தால் சண்முகப்பாண்டியன் நடிக்கும் படத்தில் கெஸ்ட் ரோல், வில்லன் ரோல் அல்லது எதாவது ஒரு டான்ஸ் எதுவேண்டுமானாலும் நான் பண்ண தயாராக இருக்கிறேன் என லாரன்ஸ் அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் ‘விஜய் செய்ய வேண்டிய செயல் இது. ஆனால் லாரன்ஸ் முன்வந்து செய்து கொண்டிருக்கிறார்’ என செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த் விஜய்க்காக செய்த அந்த உதவியை நினைத்து ரசிகர்கள் விஜயை விமர்சித்து வருகிறார்கள்.

Next Story