Connect with us
vijayakanth

Cinema History

வடிவேல் காமெடி பாத்துட்டுதான் தூங்குறேன்!.. வேற வழியில்ல!. அட சொன்னதே கேப்டன்தான்!.

Vadivelu: நடிகர் வடிவேலு விஜயகாந்தை எப்படியெல்லாம் மோசமாக விமர்சித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். ‘ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பதா?’ என பொதுவாக எல்லோரும் சொல்வார்கள். இது வடிவேலுவுக்கு மிகவும் பொருந்தும். சினிமா ஆசையில் மதுரையிலிருந்து சென்னை வந்தவருக்கு அடைக்கலம் கொடுத்தவர் ராஜ்கிரண்.

ராஜ்கிரணின் அலுவலகத்தில் ஆபிஸ் பாய் ரேஞ்சுக்கு எடுபுடி வேலைகளை செய்து வந்தார் வடிவேலு. அப்போது, ராஜ்கிரண் ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் நடித்து கொண்டிருந்தார். அந்த படத்தில் நடிக்கவிருந்த கவுண்டமணி ஒரு நாள் படப்பிடிப்புக்கு வர தாமதமானது. எனவே, வடிவேலுவை வைத்து சில காட்சிகளை எடுத்தார் ராஜ்கிரண்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் பலமுறை ரசித்து பார்த்த விஜயகாந்த் படம்!.. அதுக்கு ஒரு காரணம் இருக்கு!…

அதன்பின் கவுண்டமணி வந்துவிட வடிவேலு ஒதுங்கி ஓரமாய் நிற்க வேண்டியிருந்தது. கவுண்டமணியிடம் ராஜ்கிரண் சொல்லி சில காட்சிகளில் அவரிடம் அடி வாங்குவது போல நடிக்க வைத்தார். ஒரு பாடல் காட்சியிலும் வடிவேலுவுக்கு வாய்ப்பு கொடுத்தார். ஆனால், பின்னாளில் வளர்ந்த வடிவேலு ராஜ்கிரணை மதிக்கவும் இல்லை.. ஏறிட்டும் பார்க்கவில்லை. அவருக்கு எந்த உதவியையும் செய்யவில்லை.

அதேபோல், சின்னக்கவுண்டர் உள்ளிட்ட தனது படங்களில் வடிவேலுவுக்கு வாய்ப்பு கொடுத்தவர் விஜயகாந்த். பின்னாளில் அவரையும் வடிவேலு மதிக்கவில்லை. திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போய் விஜயகாந்தை கடுமையாக விமர்சனம் செய்தார். இப்படி நன்றியுணர்ச்சி இல்லாதவராகத்தான் வடிவேலு இருக்கிறார். ஆனால், விஜயகாந்தும் சரி, ராஜ்கிரணும் சரி மனதில் எந்த வன்மமும் இல்லாதவர்கள். எனவே, வடிவேலுவை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

இதையும் படிங்க: ஸ்கூல்ல படிக்கும்போதே வள்ளலாக இருந்த விஜயகாந்த்!.. அப்பாவின் கோபத்துக்கு ஆளான கேப்டன்..

குணச்சித்திர நடிகர் இளவரசு ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘விஜயகாந்த்துடன் எங்கள் ஆசான் என்கிற படத்தில் நடித்தேன். அப்போது ‘அரசியல் வாழ்க்கை எப்படி இருக்கு?’ எனக்கேட்டேன். அதற்கு விஜயகாந்த் ‘ஐயோ முடியல.. ஒருத்தனும் சொன்ன பேச்சு கேட்க மாட்டேங்குறான்.. சட்டசபையில நடக்குறதுலாம் பாத்தா கடுப்பா இருக்கு.. நம்ம ஒன்னு சொன்னா வெளிய ஒன்னு போடுறானுங்க.. ஒரே டார்ச்சர்’ என சொன்னார்.

ilavarasu

மேலும் ‘இரவில் வடிவேலுவின் காமெடியை பார்த்து சிரித்துவிட்டுதான் தூங்கப்போகிறேன்’ என சொன்னார். நான் உடனே அவரின் முகத்தை ஆச்சர்யமாக பார்த்தேன். நான் ஏன் அப்படி பார்த்தேன் என்பதை புரிந்துகொண்டார். ‘அவன் திட்டினா திட்டிப்போறான்.. அவனுக்கு அவ்ளோதான் அறிவு’ என்று சொன்னார். அதுதான் விஜயகாந்தின் உயர்ந்த குணம்’ என இளவரசு பேசியிருந்தார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top