நெகிழ வைக்கும் லாரன்ஸின் வீடியோ! இதுக்காகத்தான் மனுஷன் இந்தளவுக்கு ஓடுறாரு போல

by Rohini |
lawrence
X

lawrence

Actor Lawrence: பொதுவாகவே ஒரு கருத்து பேசப்பட்டு வருகிறது. அதாவது போகும்போது நாம் எதை கொண்டு போகிறோம் என்பதுதான். அதனால் இருக்கும் வரை அனைவரிடமும் அன்பாகவும் அக்கறையாகவும் பாசமாகவும் மற்றவர்களுக்கு உதவி செய்தும் வாழ்ந்து விட்டு சென்று விடு என்று சொல்வார்கள். மற்றவர்களின் குடியை கெடுக்காதே என்றுதான் நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி கொடுத்தது.

அதை மிகச் சரியாக செய்து வருகிறார் நடிகர் லாரன்ஸ். மாற்றம் என்ற பெயரில் ஒரு சேவையை ஆரம்பித்து அதன் மூலம் நாள்தோறும் ஏழை எளிய மக்களுக்கும் விவசாயிகளுக்கும் அவரால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு வருகிறார் லாரன்ஸ். இதற்கு பின்னணியில் ஏதாவது காரணம் இருக்கிறதா? என்றால் இல்லை. ஒருவேளை அரசியலில் வர எண்ணம் இருக்கிறதா என்று கூட அவரிடம் ஒரு சில பேர் கேட்டனர்.

இதையும் படிங்க: வியாபாரம் இல்லைங்க! ‘கோட்’ பட ஆடியோ லாஞ்சில் இப்படி ஒரு பிரச்சினையா?

அதற்கு லாரன்ஸ் இது என்னுடைய சேவை அவ்வளவுதான் எனக்கு கூறினார். ஒரு மனிதன் எவ்வளவு தான் உதவி செய்ய முடியும் என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு இவருடைய அந்த உதவி மனப்பான்மை பெருகிக்கொண்டே போகிறது. சில சமயங்களில் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது . விவசாயிகளுக்கு டிராக்டர்கள் வழங்குவது ஒரு கிராமத்திற்கு சென்று அங்குள்ள மக்களிடம் மக்களோடு மக்களாக இருந்து பழகுவது பேசுவது என நடிகர்களிலேயே ஒரு தனித்துவமாக இப்போது தெரிகிறார் லாரன்ஸ்.

நடிகர்கள் என்றால் படத்தின் அப்டேட் இதைத்தான் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் லாரன்ஸை பொறுத்த வரைக்கும் நாள்தோறும் அவர் எந்தெந்த ஊர்களுக்கு செல்கிறார்? என்ன மாதிரியான உதவிகளை செய்து கொண்டு வருகிறார் என்பதை பற்றிய அப்டேட் தான் இப்போது சோசியல் மீடியாவில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இப்போது ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.

இதையும் படிங்க: இளையராஜாவுடன் சண்டை!. வாய்ப்பில்லாமல் ஈ ஓட்டிய வைரமுத்து!.. கடவுள் மாதிரி வந்த வாய்ப்பு!…

ஒரு கிராமத்திற்கு சென்ற லாரன்ஸ் அங்குள்ள ஒரு வயலில் மக்களோடு மக்களாக இருந்து சமைத்து சாப்பிட்டு அதை மற்றவர்களுக்கும் கொடுத்து இவரும் அதை பார்த்து மகிழும் அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகின்றது. மேலும் அந்த வீடியோவில் கடைசியாக லாரன்ஸ் வயலின் ஓரிடத்தில் புல் தரையில் ஜமுக்காளம் விரித்து அதில் நிம்மதியாக படுத்து உறங்குவது மாதிரி அந்த வீடியோ வெளியாகி இருக்கிறது.

அதை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு வித நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. மனிதர்கள் ஆசைப்படுவது இதை ஒன்றைத்தான். நிம்மதியான உறக்கம். அது மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் தீங்கு செய்யாமல் மற்றவர்களின் வாழ்க்கையை கெடுக்காமல் நம்மால் முடிந்தவரை அவர்களுக்கு உதவியாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அந்த உறக்கம் வரும். அதைத்தான் இப்போது லாரன்ஸ் செய்து கொண்டிருக்கிறார். அதை மறைமுகமாக இந்த வீடியோவில் நமக்கு காட்டி இருக்கிறார்.

இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/C601Z_esFoS/?igsh=d2NkZTBwMWc5NHpu

Next Story