Connect with us

Cinema History

இந்தப்படம் பார்ப்பவர்களுக்கு பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும்…! சொல்கிறார் லெஜென்ட் சரவணன்

மிகுந்த ஆர்வத்தில் தமிழ்சினிமாவில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற பேரார்வத்தில் நடித்துள்ளார் லெஜண்ட் சரவணன். இவருடைய பிரஸ் மீட்டைப் பார்க்கும்போதே இவரது அபார நம்பிக்கை தெரியவருகிறது. விமர்சனங்கள் செய்பவர்களுக்குக் கூட இவர் வாழ்த்துக்கள் சொல்லி கலக்கியிருக்கிறார்.

சினிமாவில் இவர் நுழைந்ததற்கான காரணத்தை லெஜண்ட் படத்தைப் பார்த்தாலே போதும். டக்கென்று சொல்லிவிடலாம். ஏதாவது ஒரு நல்ல கருத்தை தான் நடிக்கும் படத்தின் மூலம் மக்களுக்கு சொல்லிவிட வேண்டும் என்று ஒரு துடிப்பு அவரிடம் உள்ளது.

இந்தப்படம் அந்தக்குறையைப் போக்குகிறதா என்ற கேள்வியை உங்களிடமே விடுகிறோம். இனி லெஜண்ட் மனதில் உள்ளதை உங்களிடம் பகிர்கிறார்…பார்க்கலாமா…

legend

மிகப்பெரிய பொருட்செலவில் இந்தியன் சினிமாவுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. ரஜினி சார், விஜய் சார் தான் ரோல் மாடல். இலக்கு இல்லாத எந்தப் பயணமும் பயனற்றது. சினிமாவுல இலக்கு ரொம்ப முக்கியமானது. பேன் இந்தியா படத்துக்குச் சமமா இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மிகப்பிரம்மாண்டமா எடுக்கப்பட்டுள்ளது.

நல்ல கதை அம்சம், ஆக்ஷன், நல்ல டெக்னீஷியன்கள் இருக்காங்க, மிகப்பெரிய ஜாம்பவான்கள் இந்தப்படத்தில நடிச்சிருக்காங்க. எங்களால முடிஞ்ச அளவுக்கு பெஸ்ட் எபெக்ட் கொடுத்துருக்கோம்.

ஒரு காமன் மேன் எப்படி லெஜண்ட்டா மாறுறான்கறது தான் இந்த ஸ்டோரி. ஒரு பொதுவான மனிதன் இந்த உலகத்துக்கு நல்லது பண்றதுக்கு வர்றாரு. அவரு பலவிதமான போராட்டங்களையும், தடைகளையும் சந்திக்கிறார். எப்படி அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து ஜெயிக்கிறார் என்பது தான் கதை. கடைசியில் இந்த உலகத்துக்கு அவர் என்ன கொடுக்கிறார் என்பதே படம் சொல்லும் சேதி.

legend saravanan

டைரக்டர் ஜேடி ஜெர்ரி ரொம்ப அழகா இயக்கியிருக்கிறார். படத்தை 2 ….3 தடவை பார்த்தாத்தான் உங்களுக்கு முழுமையா பார்த்ததற்கான திருப்தி கிடைக்கும். படம் பார்க்கிற ஒவ்வொருத்தருக்கும் இது பாசிட்டிவான எனர்ஜி, ஒரு நம்பிக்கையைக் கொடுக்கும். அந்த அளவு பவர்புல்லா இருக்கும். சின்னக் குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் இந்தப்படம் பிடிக்கும். இந்தப்படத்தின் கதை உலகில் உள்ள எல்லாருக்குமே பொருந்தும். அதனால தான் இதை பேன் இந்தியா பிலிமா கொண்டு வந்துருக்கோம்.

எல்லா இடத்துலயுமே எங்களுக்குக் கிடைச்ச வரவேற்பைப் பார்க்கும்போது இது மிகப்பெரிய சக்சஸாகும்னு தோணுது. இந்த முறை நான் அடிக்கிற அடி மரண அடியாத் தான் இருக்கும். எதிரியால மறுபடி எந்திரிக்கவே முடியாது….என்ற பஞ்ச் டயலாக்கைப் பிரஸ் மீட்டில் பேசி காட்டும்போது உண்மையிலேயே அவர் ஒரு லெஜண்ட் தான்.

இந்தப்படத்தைப் பார்க்கும் போது மட்டுமல்ல…இதைப் பற்றி நிறைய விமர்சனங்களைப் பார்க்கும்போது ஒன்று மட்டும் தெரிகிறது. கவலையை மறந்து சிரிக்கலாம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top