More
Categories: Cinema News latest news

5 லட்ச ரூபாயை மூட்டையில் கட்டி கொண்டு போன நடிகர்!.. ஏன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..

தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து பின் நடிகரானவர் நடிகர் லிவிங்ஸ்டன். பாக்யராஜிடம் உதவியாளராக இருந்திருக்கிறார். பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார். சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களில் கலக்கிக் கொண்டு வருகிறார்.

livingston

டார்லிங், டார்லிங், டார்லிங் படம் தான் இவர் முதன் முதலில் நடித்த படம். அதன் பின் ஒரு இவரின் நடிப்பை பார்த்து அசந்த படம் ‘பூந்தோட்ட காவல்காரன்’ திரைப்படம். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி வந்த லிவிங்ஸ்டனை ஹீரோவாக்கிய திரைப்படம் ‘சுந்தரபுருஷன்’. அதன் பின் சொல்லாமலே என்ற படத்திலும் ஹீரோவாக நடித்தார்.

Advertising
Advertising

அதனை தொடர்ந்து மல்ட் ஸ்டாரர் படங்களில் அண்ணனாகவோ தம்பியாகவோ பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் லிவிங்ஸ்டன். இந்த நிலையில் தான் வாங்கிய அதிக சம்பளத்தை தன் அம்மாவிடம் கொடுத்த போது அவரின் ரியாக்‌ஷன் என்ன என்பதை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

livingston

பிரபல தயாரிப்பாளரான இராவுத்தர் ஒரு முறை லிவிங்ஸ்டனை அழைத்து படத்தில் நடிக்க வாய்ப்பும் வழங்கி சம்பளமாக 8 லட்சம் தருவதாக கூறினாராம். ஆனால் அதுவரை லிவிங்ஸ்டன் 15000, 20000 என இந்தத் தொகையைத் தான் சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்திருக்கிறார். 8 லட்சம் என சொன்னதும் அதிர்ச்சியில் உறைந்து போனாராம் லிவிங்ஸ்டன். இதை பார்த்த இராவுத்தர் ‘என்ன இது போதாதா?’ என்று கேட்க ‘இல்ல போதும் ’ என்று சொல்லிவிட்டு படத்தில் கமிட் ஆகியிருக்கிறார்.

அதற்கு முன்னாடி வரைக்கும் லிவிங்ஸ்டன் அவரின் அம்மாவிடம் ‘ஒரு நாள் நான் லட்ச லட்சமாக சம்பாதித்து உன்கிட்ட வந்து கொட்டுறேன்’ என்று கூற அதற்கு அவரது தாயார் ‘லட்சமெல்லாம் வேண்டாம் சாமி, இருக்கிறத வச்சுக்கிட்டே நல்லா இருந்தால் போதும்’ என்று கூறியிருக்கிறார். மேலும் இராவுத்தர் எதில் வந்தாய் என்று கேட்க ‘ஆட்டோவில் தான் வந்தேன்’ என்றே லிவிங்க்ஸ்டன் கூறியிருக்கிறார்.

livingston

உடனே இராவுத்தர் தனது உதவியாளரிடம் ஒரு ஐந்து லட்சம் எடுத்து வந்து இவரிடம் கொடு என்று சொல்லி முதலில் ஒரு காரை வாங்கிக் கொள் என லிவிங்ஸ்டனிடம் சொல்ல ‘கார் அப்புறமா வாங்கிக்கிறேன், அந்த ஐந்து லட்சத்தை கையில் கொடுங்கள், என் அம்மாவிடம் போய் காட்டவேண்டும், மேலும் 100 ரூபாய் கட்டுக்களாக கொடுங்கள்,’ என்று லிவிங்ஸ்டன் கூறியிருக்கிறார்.

இராவுத்தரும் வங்கியில் இருந்து எடுத்து வரச் சொல்லி ஒரு மூட்டையில் 100 ரூபாய் கட்டுக்களாக ஐந்து லட்ச ரூபாயை கொடுத்து அவரது கம்பெனி காரில் அனுப்பி வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார். வீட்டிற்கு போனதும் அவர் அம்மா உட்கார்ந்திருக்க கொண்டு வந்த மூட்டையை அவிழ்த்து அவரது அம்மாவிற்கு அபிஷேகம் பண்ணுகிற மாதிரி மேல் இருந்து கொட்டியிருக்கிறார்.

ஆனால் அவரது அம்மாவோ அதிர்ச்சியில் எங்கடா இருந்து திருடிக் கொண்டு வந்தே? என்று கேட்க லிவிங்ஸ்டன் நான் சம்பாதிச்சதுமா என்று பெருமையாக சொன்னாராம். இந்த நிகழ்வை ஒரு பேட்டியின் போது லிவிங்க்ஸ்டன் கூறினார்.

Published by
Rohini