முதுகில் தட்டி வாய்ப்பு கேட்ட லிவிங்ஸ்டன்!.. இளையராஜாவுக்கு வந்த கோபம்!. அப்புறம் நடந்ததுதான் ஹைலைட்!..

by சிவா |   ( Updated:2023-10-13 15:26:20  )
livingston
X

Ilayaraja: இயக்குனர் மற்றும் நடிகர் பாக்கியராஜிடம் உதவியாளராக இருந்தவர் லிவிங்ஸ்டன். இயக்குனராகும் ஆசையில் இருந்தவரை விஜயகாந்த் அவர் தயாரித்த ‘பூந்தோட்ட காவல்காரன்’ திரைப்படத்தில் வில்லனாக அறிமுகம் செய்து வைத்தார். சீரியஸ் வில்லனாக இருந்த அவர் ஒரு கட்டத்தில் இன்னசண்ட் கலந்த காமெடி வில்லனாக மாறினார்.

அதுதான் ரசிகர்களுக்கும் பிடித்திருந்தது. சுந்தர புருஷன் பட கதையை அவரே எழுதி ஹீரோவாக நடித்தார்.. அதன்பின் சொல்லாமலே, விரலுக்கேத்த விக்கம் என சில படங்களில் ஹீரோவாக நடித்தார். எல்லாமே வெற்றிப்படங்கள்தான். ஆனால், ஹீரோவாக தொடர்ந்து அவர் நடிக்கவில்லை. காமெடி கலந்த வில்லன் வேடங்களில் நடித்து வந்தார்.

இதையும் படிங்க: நான்தான் தப்பு பண்ணிட்டேன்!. கமல் சார்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்!.. உருகும் லிவிங்ஸ்டன்…

ஒருகட்டத்தில் குணச்சித்திர நடிகராகவும் மாறிவிட்டார். சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய லிவிங்ஸ்டன் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். எனக்கு நடிப்பதை விட பாடுவதில் அதிக ஆர்வம் உண்டு. இளையராஜா பல திரைப்படங்களுக்கு அமைத்த பின்னணி இசைகளும் எனக்கு மனப்பாடம்.

பாக்கியராஜிடம் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்தேன். ஒருமுறை இளையராஜாவை சந்தித்து பாட்டு பாட வாய்ப்பு கேட்க வேண்டும் என நினைத்தேன். அப்போது எனக்கு எதுவுமே தெரியவில்லை. ஏவிஎம் ஸ்டுடியோவில் அவர் சீரியஸாக ஒரு பாடலுக்கு நோட்ஸ் எழுதி கொண்டிருந்தார்.

இதையும் படிங்க: நான் ஒன்னு நினைச்சி போனேன்.. விஜயகாந்த் வேற ஒன்னு பண்ணிட்டார்!.. லிவிங்ஸ்டன் சொன்ன சீக்ரெட்..

அங்கு சென்ற நான் அவரின் முதுகில் தட்டி ‘நான் நன்றாக பாடுவேன். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க’ என்றேன். கோபத்தில் அவரின் கண்கள் சிவந்துவிட்டது. அவரின் உதவியாளரை அழைத்து கண்டபடி திட்டி என்னை வெளியே அனுப்ப சொன்னார். அவர் என்னை தரதரவென இழுத்து கீழே அழைத்து சென்று அவரும் என்னை இஷ்டத்துக்கும் திட்டினார்.

‘வாய்ப்புதானே கேட்டோம் ஏன் இப்படி திட்டுகிறார்கள்?’ என எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் செய்தது தவறு என புரியவே எனக்கு பல வருடங்கள் ஆனது. அதன்பின்னர்தான் பாக்கியராஜிடம் சேர்ந்து அவரிடம் உதவி இயக்குனராக வேலை செய்தேன்’ என லிவிங்ஸ்டன் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: லிவிங்ஸ்டன் நடிப்பில் 100 நாள் ஓடிய படங்கள்! படம் முழுக்க பேசாமல் ஸ்கோர் செய்த ‘சொல்லாமலே’..

Next Story