அதிகப்பிரசங்கித்தனமாக பேசாதே...மேஜர் சுந்தரராஜனைக் கடிந்த தயாரிப்பாளர்..! கப் சிப் ஆன நடிகர்..!
நடிகரும் இயக்குனருமான மேஜர் சுந்தரராஜன் தனது பெரும்பாலான படங்களில் அப்பாவாகவே வலம் வருவார். குணச்சித்திரப்படங்களில் பிரமிக்கத் தக்க வகையில் இவரது நடிப்பு உணர்ச்சிப்பிரவாகமாக ஊற்றெடுக்கும். திறமை உள்ள மனிதர் இவர். நிறைகுடம் தழும்பாது என்பர். அவரது பேச்சிலும் அவ்வப்போது அது தென்படும்.
எவ்வளவு தான் திறமை இருந்தாலும் ஒரு பக்கம் அதிர்ஷ்டம் என்ற ஒன்று இருந்தால் தான் திரையுலகில் நீடித்து இருக்க முடியும் என நடிகர் மேஜர் சுந்தரராஜன் தௌ;ளத்தெளிவாக நமக்கு எடுத்துக்கூறுகிறார். அவர் அப்படி என்ன தான் சொல்ல வருகிறார் என்று பார்க்கலாமா...
நான் பணத்திற்காகவே நடிக்கிறேன். கiலாயக தொண்டாக என் நடிப்பைக் கருதி வருவதாக திரித்துக் கூற எனக்கு மனமில்லை. நடிகரின் வாழ்க்கை மழைக்காலத்து நிலா போன்றது. எப்போது மேகம் மறைத்துக் கொண்டு போகும் என்று சொல்ல முடியாது.
அப்போது ஒளியிழந்து விடும். என்றைக்கு நாம் வேண்டப்படாதவராக மாறிவிடுவோம் என்று நிச்சயமில்லாதது இந்தப் படவுலகம். புகழோடு நிலைத்திருக்கிற அந்த சொற்ப காலத்திலே தான், நான் என்னுடைய வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.
அதனால் தான் சின்னதோ, பெரிசோ, சிறப்போ, சிதைப்போ, மறுப்பு கூறாமல் எந்தக் கதாபாத்திரமானாலும் நடிக்க சம்மதிக்கிறேன்.
குணச்சித்திர பாத்திரங்களில் மட்டுமே நடிப்பதாக தீர்மானம் எடுத்துக் கொண்டேன். அப்படி நடித்தும் அந்தக்காட்சிகள் வெட்டப்படாமல் திரைக்கு வரும் என்பதற்கு என்ன உறுதியிருக்கிறது?
மேஜர் சந்திரகாந்த் என்ற படத்தில் கண்பார்வை அற்ற மேஜர் மாற்றி வைக்கப்பட்ட சாவியைத் தேடி எடுப்பதாக ஒரு காட்சி வரும். அதை ஒரே ஷாட்டாக அதாவது 700 அடி நீளமான நீண்ட காட்சியாகப் படமாக்கினார்கள். 6...7 முறை ஒரு பரிபூரண திருப்திக்காக அந்தக் காட்சி படமாக்கப்பட்டது. என்றாலும், அது அப்படியே படத்தில் இடம்பெறவில்லை.
ஆர்ஸன் வெல்ஸ் என்பவர் தான் 540 அடி நீளமான காட்சியில் நடித்து ரெக்கார்டு செய்திருந்தார். அந்த ரெக்கார்டை முறியடித்து உலகப்படமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அது படத்தில் இடம்பெறவில்லை.
அதுபோலவே தாமரை நெஞ்சம்..படம் வெளியானது. தனக்குப் பெரும் பாராட்டு குவியப்போகிறது என்ற எண்ணத்தில் கடுமையாக உழைத்தார் மேஜர். ஆனால் படமே வெளிவரவில்லை.
நடு இரவில் என்ற படத்தில் நல்ல கதாபாத்திரம் கிடைத்தது. பேச வேண்டிய வசனம் கரடு முரடாக இருக்கவே அதை வெளிப்படையாக டைரக்டர் பாலசந்தரிடம் தெரிவித்து விட்டார்.
அவருக்கு வந்ததே கோபம். அது உச்சந்தலைக்கு ஏறிவிட்டது. கதை வசனகர்த்தாவால் எழுதப்பட்டு டைரக்டரால் பாஸ் செய்யப்பட்ட இந்த வரிகளைப் பேசுவதற்குத் தான் உனக்கு சம்பளம் என்றார். மேஜர் அரண்டு விட்டார். அதை அவர் அவமானமாகக் கருதவில்லை. அதனால் தான் தொடர்ந்து கதை கேட்டு நடித்தார்.
பிரபல சினிமா தயாரிப்பாளர் ஜெமினி ஸ்டூடியோ அதிபர் வாசன் மோட்டார் சுந்தரம்பிள்ளை படத்தில் நடிப்பதற்காக மேஜர் சுந்தரராஜனை அழைத்தார். ரொம்ப சின்ன கேரக்டராச்சே என தயங்கினார். அதை வெளிப்படையாக சொல்லியும் விட்டார்.
உடனே அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசாதே. சிவாஜியுடன் நடிக்க உன்னைக் கூப்பிட்டிருக்கிறேன். எதிர்த்துப் பேசுகிறாயே..என்று வாசன் சத்தம் போட்டதும் அட்வான்சை வாங்கிக் கொண்டு கப் சிப் என்றாகிவிட்டார்.