இங்க இருந்தா கொன்னுடுவேன்!.. மஞ்சுமெல் பாய்ஸ் நடிகரை விரட்டிவிட்ட மம்முட்டி!.

by சிவா |
mamooty
X

மஞ்சுமல் பாய்ஸ் படம் கேரளாவை விட தமிழ்நாட்டில் அதிகமான வசூல் குவிச்சிருக்குன்னு பாக்ஸ் ஆபீஸ் மூலமா நம் எல்லாருக்கும் தெரியவந்த ஒரு உண்மை.

இப்படி இருக்கையில படம் வந்து கதையால் தான் ஹிட் ஆச்சுன்னு கேரளா ரசிகர்கள் ஒரு பக்கம் கொடி பிடிச்சுக்கிட்டு நிற்க, இல்லை எங்க கமலஹாசன் நடிச்ச குணா படத்துல வந்த கண்மணி அன்போடு காதலன் பாட்ட வச்சதுனால தான் ஹிட்டாச்சி அப்படின்னு சொல்லி இன்னொரு பக்கம் தமிழ் ரசிகர்கள் கொடி பிடிக்க ஆக மொத்தத்துல லாபம் யாருக்குன்னு பார்த்தால் அந்த படத்தை எடுத்த தயாரிப்பாளருக்கு தான்.

இதையும் படிங்க: அந்த நடிகருடன் படு கிளாமராக நடித்த ஜெயலலிதா!.. தியேட்டரில் அலைமோதிய கூட்டம்!..

கிட்டத்தட்ட 100 கோடி ரூபாயை தாண்டி அந்த படம் கலெக்ஷன் பண்ணதுனால ரொம்ப சந்தோஷத்துல இருக்குதாம் அந்த படத்தோட தயாரிப்பு நிறுவனம். அப்பட தயாரிப்பாளரும், படத்தில் நடித்த நடிகருமான சௌபின் ஷாஹிர் கேரள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிச்ச ஒரு படத்தில் உதவி இயக்குனராக வேலை பாரத்து வந்தாராம். அப்போது அவர் சின்ன பையனாக இருந்தார். பேப்பரும், கையுமா போய் மம்மூட்டி முன்னாடி நிற்க, ‘உனக்கு இங்க என்ன வேலை?..நீ கிளம்புன்னு’ கோபமாக கூறிவிட்டாறாம் மம்முட்டி.

soubin

அவரது பேச்சை தட்ட முடியாமல் அங்கிருந்து கிளம்பிய சௌபின் நடந்ததை தந்தையிடம் போய் சொல்லியிருக்கிறார். இதை கேள்விப்பட்ட அவர் மம்முட்டியை நேரடியாக சந்தித்து, தனது மகன் கல்லூரியில் படித்து வருவதாக விளக்கியிருக்கிறார். மேலும் அவருக்கு இயக்குனர் ஆவதில் அதிக ஆர்வம் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். அவரது ஆசை நிறைவேறவே தான் அவரை உற்சாக படுத்தி வருவதாகவும் சொல்லியிருக்கிறார். நீங்கள் சொன்னதை கூறி வருத்தப்பட்டிருக்கிறார் மேலும் அவருக்கு ஒரு ஒரு வாய்ப்பு தருமாறும் கேட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன்!. புலம்பிய ஜெயலலிதா!. அவரை மாற்றிய படம் இதுதான்!..

இதனை கேட்ட மம்முட்டி சௌபினை வரச்சொல்லி, படத்தில் வேலை பார்க்க சம்மதித்திருக்கிறார். ‘ஒரு பக்கம் உன் வேலையை பார்த்துட்டு இருந்தாலும் படிப்பு ரொம்ப முக்கியம் அதிலும் உன் கவனம் இருக்க வேண்டும்’ என்றும் அன்பாக அறிவுரையும் சொல்லியிருக்கிறார்.

எவ்வளவு ஒரு நல்ல மனது, எல்லோரும் நல்லா இருக்கணும் என நினைத்த மம்மூட்டியின் நல்ல மனதால் தான் சௌபின் இப்படி ஒரு இடத்திற்கு வந்து நிற்கிறேன். இதுக்கு காரணம் மம்முட்டி தான் என மகிழ்ச்சி பொங்க கூறி வருகிறாராம் மஞ்சுமெல் பாய்ஸ் புகழ் சௌபின் ஷாஹிர்.

Next Story