இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன்!. புலம்பிய ஜெயலலிதா!. அவரை மாற்றிய படம் இதுதான்!..

குடும்ப சூழ்நிலை மற்றும் அம்மாவின் வற்புறுத்தலால் சினிமாவுக்கு வந்தவர்தான் ஜெயலலிதா. சினிமாவில் நடிப்பதில் அவருக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை. ஆசிரியை ஆகவேண்டும், எழுத்தாளர் ஆக வேண்டும் என அவருக்கு பல கனவுகள் இருந்தது. அவரின் அம்மா வற்புறுத்தியதால் சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தார்.

ஒருகட்டத்தில் ஜெயலலிதா டீன் ஏஜை எட்டியதும் அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தது. அவரை நடிகையாக பார்த்த முதல் இயக்குனர் ஸ்ரீதர். அப்போது அவர் இயக்க திட்டமிட்டிருந்த வெண்ணிற ஆடை படத்திற்கு ஒரு புதுமுக நடிகையை தேடிவந்தார். அப்போதுதான் ஒரு நீச்சல் குளத்தில் ஜெயலலிதாவை பார்த்தார்.

இதையும் படிங்க: உனக்குலாம் மியூசிக் போட முடியாது!.. ராஜ்கிரணை விரட்டிய இளையராஜா!.. அப்புறம் நடந்தது இதுதான்!..

உடனே அவரின் அம்மாவிடம் பேசி சம்மதம் வாங்கினார். வெண்ணிற ஆடை படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணாக அசத்தலான நடிப்பை கொடுத்தார் ஜெயலலிதா. அதேபோல், நாடகங்களிலும் நடித்தார். ஒருபக்கம் கலைநிகழ்ச்சிகளில் பரதநாட்டியமும் ஆடி வந்தார் ஜெயலலிதா. இதுவெல்லாம் அவரின் அம்மா வற்புறுத்தியதால் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனாலும், நடிப்பில் அவருக்கு கொஞ்சம் கூட ஆர்வமில்லை. வெண்ணிற ஆடை படத்தில் நடிக்கும்போது ‘இந்த ஒரு படம்தான் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன். நான் படித்து கலெக்டர் ஆக வேண்டும்’ என அவரின் அம்மாவிடம் புலம்பிக்கொண்டே இருப்பாராம் ஜெயலலிதா.

இதையும் படிங்க: சந்தானபாரதியின் இயக்கத்தில் அதிகமான வெற்றி படங்களில் நடித்த ஹீரோ இவரா? அப்படின்னா கமல்?..

வெண்ணிற ஆடை படத்திற்கு பின் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. அந்த படத்திற்கு பின்னரே அவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டதாம். அதோடு, அந்த படத்தின் மாபெரும் வெற்றி ஜெயலலிதாவை முன்னணி நடிகையாகவும் மாற்றியது.

தொடர்ந்து பல திரைப்படங்களில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார். ஒருகட்டத்தில் நடிப்பை விட்டுவிட்டு ஒதுங்கி அரசியலிலும் நுழைந்தார். எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் அதிமுகவை கைப்பற்றி கட்சியின் தலைவியாக மாறியதோடு தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story