Connect with us
Santhana bharathi

Cinema History

சந்தானபாரதியின் இயக்கத்தில் அதிகமான வெற்றி படங்களில் நடித்த ஹீரோ இவரா? அப்படின்னா கமல்?..

கமலின் நெருங்கிய நண்பர். ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவர் சந்தானபாரதி. இவர் கமல் நடித்த பெரும்பாலான படங்களிலும் நடித்து இருப்பார். இவரது தம்பி ஆர்.எஸ்.சிவாஜியும் இணைந்து நடித்துள்ளார். என்றாலும், சந்தானபாரதி கமலை வைத்து இயக்கியதை விட நடிகர் பிரபுவை வைத்து இயக்கிய படங்களே அதிகம். இவற்றில் என்ன விசேஷம் என்றால் அவை எல்லாமே சூப்பர்ஹிட். வாங்க என்னென்னு பார்க்கலாம்.

எங்கிருந்தோ வந்தான். சத்யராஜ் நடித்த இந்தப் படத்தை இயக்கியவர் சந்தானபாரதி. படத்தின் கதை பெரிய அளவில் ரசிக்காததால் படம் ஓடவில்லை. மதுமலர் படத்தின் டைரக்டர் பாரதி வாசு. அப்பா பெயர் சந்தானம். அதனால சந்தானபாரதின்னு பேரு வச்சிக்கிட்டாரு. பாரதி வாசுன்னா டைரக்டர் பி.வாசுவும் அவரோட கூட்டணி வச்சிருப்பாரு.

என் தமிழ் என் மக்கள் படத்தில் சிவாஜி தான் ஹீரோ. இது எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. மெல்ல பேசுங்கள் படத்தில் வசந்த் என்பவர் நடித்தார். பானுப்பிரியா ஜோடி. கதை நல்லா இருந்தும் படம் பிளாப் ஆனது. சந்தானபாரதி, பி.வாசு கூட்டணியில் இதுவும் பிளாப். சாகசமே ஜீவிதம் என்ற தெலுங்கு படத்தை பாரதிவாசு இயக்கினர். இது பாலகிருஷ்ணா நடித்த படம். அங்கும் இது பிளாப் தான்.

நீதியின் நிழல். இது பாரதிவாசுவின் கடைசி படம். இந்தப்படத்திற்குப் பிறகு இருவரும் பிரிந்து தனித்தனியாக இயக்கினார்கள். சிவாஜி, பிரபு நடித்த படம். இது ஆவரேஜ் ஹிட். பூவிழி ராஜா படத்தில் பிரபுவுடன் நிஷாந்தி அதாவது சாந்திப்பிரியா நடித்தார். இவர் பானுப்பிரியாவின் தங்கை. இது வெற்றிப் படம்.

Kamal, Prabhu

Kamal, Prabhu

குணா படத்தை இன்று வரை பேசச் செய்துவிட்டார் சந்தானபாரதி. நிறைய விஷயங்கள் இதுல பெட்டரா இருந்தது. மஞ்சுமல் பாய்ஸ் படமே இதன் தாக்கத்தில் தான் வந்து பிளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. அந்த நேரத்தில் குணா பிளாப்னு சொன்னாங்க. ஆனா எதிர்பார்த்த அளவில் அப்போது வரவேற்பு கிடைக்கவில்லை.

காவலுக்கு கெட்டிக்காரன் படத்தில் பிரபு தான் ஹீரோ. கருணாநிதி தான் கதை வசனம் எழுதினார். இந்தப்படம் 100 நாள் ஓடி வெற்றி பெற்றது. வியட்நாம் காலனி படத்திலும் பிரபு தான் ஹீரோ. அவருடன் எடுக்கும் எல்லாப் படங்களும் செம மாஸாக இருந்தன. இந்தப் படத்தில் காமெடி வேற லெவல். நல்ல ரீச்சைக் கொடுத்த படம்.

மகாநதி கமல் நடிப்பில் சிறந்த படம். கமலுடன் இவருக்குள்ள கெமிஸ்ட்ரி செம மாஸாக இருக்கும். ரெண்டே படங்களில் ஹீரோவாக கமல் நடித்தாலும் அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் உலகநாயகன். இந்தப்படம் பல விருதுகளை வாங்கியது. எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

இதையும் படிங்க… 10 பெரிய இயக்குனர்கள் இயக்கியும் தோல்வி அடைந்த எம்ஜிஆர் படங்கள்… அடேங்கப்பா இவ்ளோ இருக்கா?

கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற படத்தையும் சந்தான பாரதி இயக்கினார். இதை கமல் தான் தயாரித்தார். சத்யராஜ் நடித்தார். இது பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. சின்ன மாப்ளே படம் பிரபு நடித்தது. சந்தானபாரதி பிரபுவுடன் இணைந்து 4 படங்களில் பணியாற்றியுள்ளார். காமெடி செம மாஸாக இருந்தது. இது 100 நாள்களைக் கடந்து ஓடி வெற்றி பெற்றது.

பன்னீர் புஷ்பங்கள் தான் பாரதி வாசு கூட்டணியின் முதல் படம். அதுவும் மெகா வெற்றி பெற்றது. பிரதாப் போத்தன், சுரேஷ், சாந்திகிருஷ்ணா, வெண்ணிற ஆடை மூர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட். இது ஒரு வருடம் வரை ஓடியது என்றும் சொல்லலாம். மினிமம் பட்ஜெட்டில் எடுத்து நல்ல கமர்ஷியல் வெற்றியைக் கொடுத்தது.

google news
Continue Reading

More in Cinema History

To Top