கார்த்திக் படத்தில் நானா? தயாரிப்பாளரை கண்டபடி திட்டிய மம்மூட்டி.. என்ன கேரக்டர் தெரியுமா?
தமிழ் சினிமாவில் நவரச நாயகனாக அன்றிலிருந்து இன்று வரை ரசிகர்கள் மத்தியில் ஒரு ஆழமான இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் கார்த்திக். அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமான கார்த்திக் தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் நடித்தார். 80 90களில் ஒரு ஹேண்ட்ஸமான ஹீரோவாக இந்த தமிழ் திரை உலகில் வலம் வந்தார்.
இந்த நிலையில் கார்த்திகை பற்றி ஒரு சுவாரஸ்ய தகவலை பல சினிமா தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். கார்த்திக் நடிப்பில் வாசு இயக்கத்தில் 2000 ஆண்டு வெளிவந்த திரைப்படம் சீனு. படம் முழுக்க முழுக்க இசையை மையப்படுத்தி அமைந்த திரைப்படமாக வெளிவந்திருக்கும். இந்த படத்தில் கார்த்திக்கு அண்ணனாக வாசு நடித்திருப்பார்.
இதையும் படிங்க: கூலி டீசர் வீடியோவில் லோகேஷ் செஞ்ச வேலைய கவனிச்சீங்களா?!.. அட இது தெரியாம போச்சே!…
ஆனால் இந்த கேரக்டரில் முதலில் மம்மூட்டியை நடிக்க வைக்க தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் நினைத்திருக்கிறார். இதை மம்முட்டியிடம் போய் கூற அதற்கு மம்மூட்டி கண்டபடி திட்டிவிட்டாராம். நான் அண்ணனாக நடிப்பதா? ஹீரோவாக வைத்து படம் எடுக்க மாட்டியா என்ன திட்டிவிட்டாராம். அதன் பிறகு வாசு இந்த கதாபாத்திரத்தில் நானே நடிக்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.
ஆனால் இதில் மாணிக்கம் நாராயணனுக்கு உடன்பாடே இல்லையாம். அதற்குள் அந்த கதாபாத்திரத்திற்கேற்றவாறு அந்த லுக்கில் வாசு போட்டோ எல்லாம் எடுத்து வந்து மாணிக்கம் நாராயணிடம் காட்டியிருக்கிறார். ஆனால் அவரின் நடிப்பு எப்படி இருந்தது என அந்தப் படத்தை பார்த்த அனைவருக்கும் தெரிந்திருக்கும்.அதுவே இந்த படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது என மாணிக்கம் நாராயணன் கூறினார்.
இதையும் படிங்க;ராதிகா கர்ப்பத்தால் மனம் உடைந்து போன பாக்கியா… இருக்கும் தானே!… ஆனா?
அடுமட்டுமில்லாமல் படத்தின் தோல்விக்கு முக்கால்வ் வாசி காரணமே கார்த்திக் தான். ஒழுங்காக படப்பிடிப்பிற்கு வரமாட்டார். அடிக்கடி கையில் ஊசிப் போட்டுக் கொண்டு படுத்துவிடுவார் என்றெல்லாம் மாணிக்கம் நாராயணன் கூறினார்.