விஜய் சேதுபதியின் இத்தனை படங்களில் மணிகண்டன் நடிக்க வேண்டியதா? ‘மகாராஜா’ல நடந்த மேஜிக்
VJS Manikandan: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் முன்னாடி நடிகராக இருந்த வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தற்போது அவருடைய ஐம்பதாவது படமான மகாராஜா திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. இதற்கு முன் அவர் வில்லனாக பல படங்களில் நடித்து மாஸ் காட்டி வந்த நிலையில் ஹீரோவாக அவர் நடித்து நீண்ட நாளுக்கு பிறகு வெற்றிகரமாக ஓடிய படமாக இந்த மகாராஜா திரைப்படம் அமைந்திருக்கிறது.
அவர் ஹீரோவாக நடித்து கடைசியாக வெற்றியடைந்த படம் காத்து வாக்குல ரெண்டு காதல். அதன் பிறகு இந்த படம் தான் பெரிய அளவில் பேசப்படுகிறது. இந்த நிலையில் மகாராஜா திரைப்படத்தில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு பாய்ஸ் படத்தின் ஒரு ஹீரோவான மணிகண்டன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருப்பார்.
இதையும் படிங்க: ஒரே குடியிருப்பில் விஜய், த்ரிஷா! அந்த போட்டோவுக்கு பின்னனியில் இப்படி ஒரு காரணம் இருக்கா?
பாய்ஸ் படத்தில் நடித்த ஐந்து ஹீரோக்களுமே அவரவர் கெரியரில் பிஸியாக இருந்த நிலையில் மணிகண்டன் மட்டும் கொஞ்சம் தடுமாறிப் போனார் என்று தான் சொல்ல வேண்டும். அவருக்கு ஒரு உத்தேகமாக அமைந்தது இந்த மகாராஜா திரைப்படம். இந்த நிலையில் தனக்கும் விஜய் சேதுபதிக்கும் இருக்கும் அந்த ஒரு பாண்டிங் பற்றி ஒரு பத்திரிக்கையில் பேட்டி கொடுத்திருக்கிறார் மணிகண்டன்.
பாய்ஸ் படத்தில் மணிகண்டன் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டியது விஜய் சேதுபதி தானாம். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அவர் நடிக்காமல் போக மணிகண்டன் நடிக்க வேண்டியதாகி விட்டது என்று கூறி இருக்கிறார். அதேபோல தென்மேற்கு பருவக்காற்று படத்தில் முதலில் நடிக்க வேண்டியது மணிகண்டன்.
இதையும் படிங்க: எல்லாம் போச்சே!.. பெயரை கெடுத்துக்கொண்ட விஷால்!.. கைவிட்ட திரையுலகம்!..
அதுமட்டுமல்லாமல் சூது கவ்வும் படத்தில் பாபி சிம்ஹா கேரக்டரிலும் நடிக்க வேண்டியது மணிகண்டன் தானாம். இப்படி விஜய் சேதுபதியின் படங்களில் தன்னால் நடிக்காமல் போனது இப்போது மகாராஜா படத்தில் நிறைவேறி இருக்கிறது. இது ஒரு மேஜிக் போலவே எனக்கு தெரிகிறது. இதிலிருந்து எனக்கும் விஜய் சேதுபதிக்கும் ஏதோ ஒரு கனெக்சன் இருப்பதாகவே தோன்றுகிறது என மணிகண்டன் அந்த பத்திரிகையில் பேட்டி கொடுத்திருக்கிறார்.