மனோஜ் தவற விட்ட பிளாக் பஸ்டர் படங்கள்… அட இதெல்லாமா இருக்கு?

by sankaran v |   ( Updated:2025-03-30 03:33:28  )
manoj
X

manoj

90ஸ் காலகட்டத்தில் தமிழ்சினிமாவில் வளர்ந்து வந்த நடிகர் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ். சில படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெயர் வாங்கினார். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் மனோஜ் இயக்குனர் பாரதிராஜாவின் தாஜ்மகால் படத்தில்தான் அறிமுகம் ஆனார்.

தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம், பல்லவன் படங்களில் நடித்துள்ளார். இன்னும் சொல்லணும்னா பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரோட எந்திரன் படத்தில் சிட்டி ரோபோவாக நடித்தவர் இவர்தானாம். இனி மனோஜ் தவறவிட்ட பிளாக்பஸ்டர் படங்களைப் பார்ப்போம்.

குஷி: எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் 2000த்தில் வெளியான படம் குஷி. விஜய், ஜோதிகா உள்பட பலர் நடித்துள்ளனர். இது தாறுமாறான பிளாக்பஸ்டர் ஹிட். இந்தப் படத்தில் முதலில் மனோஜ் தான் நடிக்க இருந்தாராம். அப்புறம் விஜய் நடித்து தாறுமாறு ஹிட். இதில் மனோஜ் நடித்து இருந்தால் தமிழ்சினிமா உலகில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பார்.

kushiகற்றது தமிழ்: ராம் இயக்கத்தில் 2007ல் வெளியான சூப்பர்ஹிட் படம். ஜீவா, அஞ்சலி, கருணாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜாவின் இசை சூப்பராக இருக்கும். இந்தப் படத்தில் ஜீவாவின் நடிப்பு செம மாஸாக இருக்கும். அவரது கேரியரில் ரொம்பவே முக்கியமான படம். இந்தப் படத்தையும் மிஸ் பண்ணி விட்டார். இந்தப் படங்களை எல்லாம் தவறவிடாமல் இருந்தால் அவர் மிக முக்கியமான இடத்தைப் பிடித்து தமிழ்த்திரை உலகில் வெற்றிகரமான நடிகராக வலம் வந்து இருப்பார்.

எல்லாரிடமும் ஜாலியாகப் பேசிப் பழகும் இவருக்கு சினிமா பெரிய அளவில் கைகொடுக்கவில்லை என்றே சொல்லலாம். அந்த வகையில் பல அவமானங்களையும் சந்தித்த இவர் மனதுக்குள்ளேயே போட்டு அழுத்தி சோகத்தை வெளியே காட்டாமல் இருந்துள்ளார்.

இவர் மேற்கண்ட படங்களை மிஸ் பண்ணாமல் நடித்திருந்தால் கூட இவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது என்றே தெரிகிறது. நமக்குத் தெரிந்த வரையில் 2 படங்கள்தான் இருக்கு. இன்னும் எத்தனை படங்களை மிஸ் பண்ணினாரோ அது தெரியவில்லை.கடந்த மார்ச் 25ல் நம்மை விட்டுப் பிரிந்து தமிழ்த்திரை உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டார்.

Next Story