கோபத்தில் விஜயகாந்த் என்னை எட்டி உதைச்சாரு!.. நாங்க போடாத சண்டையா?- கூலா சொன்ன மன்சூர் அலிகான்…

Published on: August 18, 2023
vijayakanth
---Advertisement---

நடிகர் விஜயகாந்த்தும், மன்சூர் அலிகானும் கேப்டன் பிரபாகரன், நெறஞ்ச மனசு, பேரரசு, ஏழை ஜாதி, தென்னவன், தாயகம் உள்ளிட்ட பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முன்னணி வில்லன் நடிகராக இருந்தவர் மன்சூர் அலிகான். தற்போது மீண்டும் சினிமாவில் பிசியாகியுள்ளார்.

லியோ படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் மன்சூர் அலிகான். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் விஜயகாந்த் பற்றி உருக்கமாக பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். விஜயகாந்த் பற்றி கேள்வி கேட்டதற்கு, கடவுள் அவருக்கும் இன்னும் பல ஆண்டுகள் வாழ ஆயுள் கொடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

இதையும் படிங்க- எல்லாம் கூடி வந்தும் கமல் கூட நடிக்க முடியாம போச்சி!.. புலம்பும் மன்சூர் அலிகான்….

அவர் மிகவும் தங்கமான மாமனிதர். அவர் மிகவும் வலிமையானவர். படப்பிடிப்பில் எனக்கு அடிக்கடி அரிசி மூட்டைகளை தூக்கி காட்டுவார். அவரை அப்படி வலிமையாக பார்த்துவிட்டு, இப்போது தளர்ந்து போய் பார்க்க மிகவும் கஷ்டமாக இருக்கிறது. பல பேருக்கு உணவு வழங்கியவர் அவர்.

பல இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், நடிகர்களை அறிமுகம் செய்து வைத்தவர். யாரும் பசியில் இருக்க கூடாது என்று நினைப்பவர். இந்த பாலாபோன அரசியலால் தான் அவர் இப்படி ஆகிவிட்டார். நாம் அவரை பாதுகாக்க தவறிவிட்டோம்.

அவருக்கு இப்படி ஆகியிருக்க கூடாது. கேப்டன் பிரபாகரன் படத்தின் ப்ரிவ்யூ ஷாவின் போது அங்கு வந்த அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் பிரியாணி போட்டார் விஜயகாந்த். நாங்கள் அடிக்கடி சண்டை போடுவோம், உடனே சேர்ந்துவிடுவோம்.

எனக்கு அவர் நடிப்பு சொல்லி தந்திருக்கிறார். கேப்டனிடம் நிஜமாகவே உதை வாங்கியிருக்கிறேன். சுவற்றில் காலை ஊன்றி சுழற்றி உதைப்பார். அந்த கேப்டன் கிக்கை நான் வாங்கியிருக்கிறேன். அவர் இப்படி உடல்நிலை சரியில்லாமல் இருப்பது மிகவும் கொடுமையான விஷயம் என்று மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க-ரஜினி மேல எனக்கு இதுதான் கோபம்!.. அந்த நடிகர பார்த்து கத்துக்கணும்.. பொங்கிய மன்சூர் அலிகான்..

prabhanjani

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.