‘ஜெயிலர்’ படத்தின் மீது இருந்த வருத்தம்! ‘எதிர்நீச்சல்’ இயக்குனரிடம் புலம்பி தீர்த்த மாரிமுத்து
Actor Marimuthu: தமிழ் சினிமாவில் இயக்குனராக வரவேண்டும் என்ற ஆசையில் சினிமாவிற்குள் வந்தவர்தான் நடிகர் மாரிமுத்து. உதவி இயக்குனராக இருந்து இரண்டு படங்களை இயக்கியதின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தவர். ஆனால் காலம் அவரை நடிகராக்கி பார்க்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டது.
இருந்தாலும் நடிப்பில் அசாத்திய திறமை பெற்ற நடிகராகவே வலம் வந்தார் மாரிமுத்து. ஊர் வழக்கப்பேச்சால் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார். ஏகப்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் எதிர்நீச்சல் சீரியல்தான் மாரிமுத்து யார் என்பதை இந்த உலகுக்கு காட்டியது.
இதையும் படிங்க: 17 வயசுலயே அப்பாவிடம் அந்த ஆசையை சொன்ன கமல்!.. காம ராசன் என சும்மாவா சொன்னாங்க!..
இந்த தொடரில் அவரின் முரட்டுத்தனமான நடிப்பால் ‘யாருய்யா இந்த மனுஷன்?’ என்ற கேள்வியை எழுப்பியது. அதன் பிறகே மாரிமுத்துவின் எல்லா தகவல்களையும் ரசிகர்கள் தேட ஆரம்பித்தார்கள்.
சினிமாவிற்குள் வருவதற்காக ஏகப்பட்ட கஷ்டங்களை கடந்துதான் வந்திருக்கிறார் மாரிமுத்து. பெரும்பாலானோர் அப்படித்தான் வருகிறார்கள். இருந்தாலும் எல்லா செல்வங்களையும் பெற்று அதை அனுபவிக்கின்ற நேரத்தில் மாரிமுத்துவின் மரணம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க; கல்யாணத்துக்கு பிறகுதான் கவர்ச்சி நடிகைன்னு தெரியும்! அப்புறம் நடந்ததுதான் ட்விஸ்டே!..
இந்த நிலையில் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு தனியார் சேனல் அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். அதில் மாரிமுத்துவின் மனைவி, மகன், மகள், மற்றும் அவரது உறவினர்கள், எதிர் நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டு மாரிமுத்துவின் நினைவலைகளை பகிர்ந்தார்கள்.
அப்போது பேசிய எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் மாரிமுத்து எப்போதுமே அவரை பாராட்டுவதையே எதிர்பார்ப்பாராம். அதனாலேயே ஒவ்வொரு ஷார்ட் முடியும் போதும் சார் நல்லா நடிச்சிருக்கேனே என்று கேட்டுக் கொண்டே இருப்பாராம்.
இதையும் படிங்க: துருவ் விக்ரமை விடாமல் துரத்தும் பாலா!.. பொறந்தநாள் அதுவுமா நிம்மதியா விடமாட்டுறாரே!..
மேலும் இன்னும் நிறைய படங்கள் அவர் நடிப்பில் வரவேண்டியிருக்கிறதாம். அந்தளவுக்கு ஏராளமான படங்களில் நடித்திருக்கிறாராம் மாரிமுத்து. மேலும் ஜெயிலர் படத்தில் நடிக்கும் போது கூட அந்தப் படத்தில் மாரிமுத்துவுக்கு நிறைய காட்சிகள் இருந்ததாம்.
ஆனால் படத்தின் நீளம் கருதி அதை எடிட் செய்து விட்டார்களாம். அது மாரிமுத்துவுக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்ததாம். ‘என்னுடைய ஏராளமான சீன்களை கட் செய்து விட்டார்கள். அது கொஞ்சம் ஏமாற்றமாக இருக்கிறது’ என்று திருச்செல்வத்திடம் கூறினாராம்.