Connect with us
aadhi

latest news

டப்பிங் அறையில் நடந்த திக் திக் நிமிடங்கள்! மாரிமுத்து இறப்பதற்கு முன் பேசிய வார்த்தைகள் – உடனிருந்த இன்ஜினியர்

Ethirneechal Fame Marimuthu: சன் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். சீரியலை வெறுக்கிறவர்கள் கூட இந்த சீரியலை விரும்பி பார்க்கிறார்கள் என்றால் அதற்கு ஒரே காரணம் அந்த தொடரில் ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்துதான்.  ‘இந்தாம்மா ஏய்’ என்ற ஒரே வார்த்தை. பட்டிதொட்டியெல்லாம் பரவியது.

அதை வைத்துக் கொண்டே பல மீம்ஸ்கள் உருவாக ஆரம்பித்தது. சொல்லப்போனால் வடிவேலுவுக்கு பிறகு அதிக மீம்ஸ்களை வாங்கியவர் மாரிமுத்து என்றே சொல்லலாம். பேச்சிலும் செயலிலும் ஒரு நேர்மை இருக்கும்.

இதையும் படிங்க: வாங்குனது 3 கொடுத்தது 1… அவசரப்பட்ட ஐசரி கணேஷ்… அல்வா போல் ஆட்டைய போட்ட சிம்பு..

இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் சொந்த மண்ணை விட்டு சென்னைக்கு வந்த மாரிமுத்து இரண்டு படங்களை இயக்கினார். ஆனால் சினிமா அவரை வேறு பாதைக்கு கொண்டு சென்றது. நடிகராக்கி அழகு பார்த்தது.

ஆனால் அதிலும் வெற்றி பெற்றார். தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களாக இருக்கும் மணிரத்னம், எஸ்.ஜே.சூர்யா, வைரமுத்து ஆகியோரிடம் உதவியாளராக இருந்தவர்தான் மாரிமுத்து. சினிமாவில் அவருக்கு என்று ஒரு தனி அடையாளமே இருக்கின்றது.

இதையும் படிங்க: ‘தளபதி 68’ல் சிக்கிய அந்த பாலிவுட் நடிகர்! ஸ்கெட்ச் போடுவதில் கில்லாடியா இருப்பார் போலயே!…

அப்படி இருந்தும் சின்னத்திரைக்குள் வந்து அங்கும் தடம் பதித்தார். ஒரே ஒரு சீரியல்தான். ஒட்டுமொத்த புகழையும் தட்டிச் சென்றார். எதிர்நீச்சல் சீரியலில் எதிர்மறையான கதாபாத்திரமாக இருந்தாலும் அவருக்காகவே பார்த்த ரசிகர்கள்தான் ஏராளம். இப்படி பட்ட ஒரு  நல்ல மனிதர் இன்று நம்மிடையே இல்லை என்று நினைக்கும் போது ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் போதே அவருக்கு நெஞ்சு வலி வந்து இறந்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதை டப்பிங் அறையில் இருந்த இன்ஜினியரான கார்த்தி கூறியிருக்கிறார். இன்று அதிகாலை 6.30 மணியளவில் டப்பிங் ஸ்டூடியோவிற்கு வருவாராம்.

இதையும் படிங்க: கோபத்தில் பிரிந்த கண்ணதாசன் – சிவாஜி.. பிரிந்த இரு துருவங்களையும் சேர்த்த அந்த அழகான பாடல்…

எப்பொழுதெல்லாம் சூட்டிங் இல்லையோ அந்த நாள்களில் சீக்கிரமே டப்பிங் வந்து விடுவாராம். அதே போல் தான் இன்றும் வந்திருக்கிறார். 6.30 லிருந்து 8 மணி வரைக்கும் டப்பிங் பேசிக் கொண்டிருந்தாராம். அதன் பிறகு திடீரென மூச்சுத் திணறுகிற மாதிரி இருக்கிறது என்று சொல்லி கொஞ்ச நேரம் வெளியே ஓய்வெடுத்து விட்டு வருகிறேன் என்று சொன்னாராம்.

இன்ஜினியரான கார்த்தியும் அவருடன் வெளியே வந்து உட்கார வைத்து விட்டு உள்ளே சென்றுவிட்டாராம். அந்த நேரத்தில் சக நடிகரான கமலேஷ் அவர் வருவதற்குள் நான் பேசி விடுகிறேன் என்று உள்ளே போனாராம். கமலேஷ் டப்பிங் முடித்து கார்த்தியும் கமலேஷும் வெளியே வந்து பார்க்க அதற்குள் மாரிமுத்து காரை எடுத்து அவரே மருத்துவமனைக்கு சென்று விட்டதாக அவர்களுக்கு தெரியவந்திருக்கிறது.

பிறகு அவர் தொலைபேசியில் அழைத்த போது மாரிமுத்துவின் மகள் தான் போனை எடுத்து அப்பா இறந்து விட்டதாக கூறியிருக்கிறார்.

google news
Continue Reading

More in latest news

To Top