எம்ஜிஆர் இதுவரை தன்னைப் புகழ்ந்ததே இல்ல.. ஆனா அவரே அவரை புகழ்ந்த படம் இதுதாங்க!..

தமிழ்சினிமா உலகில் சமீபத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமி தனது இறப்பு குறித்து தீர்க்கதரிசனமாக ஒரு சில வார்த்தைகள் சொல்லியிருக்கிறார். தான் கடைசியில் பேசிய மேடைப் பேச்சு ஒன்றில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் குறித்து இவ்வாறு தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

நிறைய நாள் உயிரோட இருக்கணும்கற ஆசையில்ல. அதே மாதிரி இருக்கும் வரை உதவி செஞ்சுக்கிட்டு இருக்கணும்கற ஆசை இருக்கு. சரத்குமார், சத்யராஜ், பி.வாசு, விவேக் இவங்களுக்கெல்லாம் அப்பப்ப பண்ணி யாருக்காவது பிரச்சனைன்னா நான் போன் பண்ணுவேன். எனக்கு பண்ணுவாங்க.

எம்ஜிஆருக்கு பஞ்ச் டயலாக் தானாவே வரும். நம்பியார் கம்பீரமாக நான் பயங்கரமானவன்னு சொல்வாரு. எம்ஜிஆரு சாதாரணமாக நான் பயப்படாதவன்னு சொல்வாரு. இதெல்லாம் யாரும் தனியா அவருக்கு எழுதிக்கொடுக்கல. தானாவே வரும்.

புலமைப்பித்தன் உலகம் சுற்றும் வாலிபன் படத்துல எழுதுறாரு. நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற பாடல் எப்படி எழுதுனாரு?

USV

நல்லது நினைப்பது அறிவாற்றல்...அல்லது நினைத்தால் அழிவாற்றல்....நல்லதை நினைச்சா அறிவு. தப்பா நினைச்சா அழிஞ்சிடுவேன்...இந்த வரி எம்ஜிஆருக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும். ஒரு ஒரு வரியும்....அதாவது எம்ஜிஆருக்கு எழுதுன பாட்டு எல்லாமே அவருக்காகத் தான். ஆனா அவரு பாடுனது எல்லாமே நமக்காக...!

எந்தப் படத்துலயும் எம்ஜிஆர் தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளவே மாட்டாரு. மத்தவங்க தான் புகழ்வாங்க. ஆனா ஒரு படத்துல எம்ஜிஆரை எம்ஜிஆரே புகழ்கிற சீன் வந்துடுச்சு. உலகம் சுற்றும் வாலிபன்கற படத்துல கிளைமாக்ஸ் 20 நிமிஷம்.

அந்த 20 நிமிஷமும் எம்ஜிஆரே இருக்க மாட்டாரு. நீங்க கிளைமாக்ஸ்ல பாருங்க. ஒரு எம்ஜிஆருக்கு மாஸ்க் போட்டு கிய்யா மிய்யான்னு சுத்த விடுவாங்க. இன்னொரு எம்ஜிஆருக்கு டூப் போட்டு சல்லுன்னு சல்லுன்னு வந்துக்கிட்டுருப்பாரு.

அப்போ எம்ஜிஆரு டைரக்ஷன் மட்டும் பண்ணிக்கிட்டுருப்பாரு. ஒரு பேப்பர்ல ரவுண்டு ரவுண்டா போட்டுருக்கும். அந்த பேப்பரை எடுத்து ஏற்கனவே எழுதி வச்ச பேப்பர் மேல வைப்பாரு. எங்கெங்க ஓட்டை இருக்கோ அந்த இடத்துல இருந்து லட்டர்ஸ எழுதி அதுல இருந்து இந்த இடத்துல இது இருக்குன்னு கண்டுபிடிப்பாரு.

அப்போ எம்ஜிஆர் சொல்வாரு. எங்க அண்ணனோட அறிவைப் பார்த்தியா...? தம்பி ராஜூ. அண்ணன் முருகன். ராஜூ சொல்றாரு. யாரை சொல்றாரு. அவரைத் தான் சொல்றாரு. ஏன்னா காட்சிகள் அப்படி. ரசிகனுக்கும், தொண்டனுக்கும் கொடுப்பதற்காகவே ஒரு படம் பண்ணினாரு.

NAP

அதான் நான் ஏன் பிறந்தேன். இன்னிக்கு கோடி கோடியா வாங்குனாலும் யாரும் அப்படி இல்லையே....உயிரோடு இருக்கும் வரை எங்கள் உயிர் மூச்சு ஒன்லி ஃபார் எம்ஜிஆர்.

 

Related Articles

Next Story