எம்.ஜி.ஆருக்கு எப்போதும் பிடிக்காத இரண்டு விஷயங்கள்!.. அது என்னன்னு தெரியுமா?..
வாலிப வயது முதலே நாடகங்களில் நடிக்க துவங்கி நாடகங்களில் பெண் வேடம் முதல் பல வேஷங்களை போட்டு அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக சினிவாவில் நுழைந்து, அதிலும் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கி பின்னர் பெரிய ஹீரோ ஆனவர் நடிகர் எம்.ஜி.ஆர்.
சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் அவர் கடத்திய நாட்கள் பல உண்டு. அதனால்தான் அவர் பெரிய ஹீரோ ஆகி பணம் சம்பாதித்த பின் எல்லோருக்கும் தன்னால் முடிந்தவரை அள்ளிக் கொடுத்தார். கருப்பு வெள்ளை முதல் கலர் சினிமாவரை பல படங்களில் நடித்த எம்.ஜி.ஆர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் மாறினார்.
உணவு அருந்துவது என வந்துவிட்டால் பலருடன் அமர்ந்து சாப்பிடுவதுதான் அவருக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். மீன் வகை உணவுகளை விரும்பி சாப்பிடுவார். அதேபோல், மதிய உணவில் கண்டிப்பாக இரண்டு கீரை வகைகளை சாப்பிடுவார். கீரை சாப்பிடுங்கள் என தன்னுடன் சாப்பிடும் எல்லோரும் சொல்பவர் எம்.ஜி.ஆர்.
அதேபோல், அதிகாலை 5 மணிக்கு எழுந்து தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். வெளியூர் படப்பிடிப்புக்கு போனாலும் இதை செய்யாமல் இருக்க மாட்டார். அவருக்கு பிடிக்காத இரண்டு விஷயங்கள் எனில் ஒன்று குதிரை ஏற்றம் மற்றொன்று விமான பயணம். அவர் சரித்திர திரைப்படங்களில் நடித்தபோது குதிரை ஓட்டும் காட்சிகளில் நடித்திருந்தாலும் அவருக்கு பிடிக்காத ஒன்றாகத்தான் அது இருந்திருக்கிறது. அதேபோல், படப்பிடிப்பில் சீரக தண்ணீர் குடிப்பதை எம்.ஜி.ஆர் வழக்கமாக கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்த நாட்டுக்கட்டய உடனே கடத்துங்கடா!.. இடுப்பு மடிப்ப காட்டி இம்சை பண்ணும் லாவண்யா..