Cinema History
சரோஜாதேவியை வெளியே போக சொல்லுங்க!.. எம்.ஜி.ஆர் சொன்னதற்கு காரணம் இதுதான்!…
எம்.ஜி.ஆருடன் பல திரைப்படங்களில் நடித்தவர் சரோஜா தேவி. ஜெயலலிதாவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தாரோ அதுபோலவே சரோஜா தேவிக்கும் முக்கியத்துவம் கொடுத்தார் எம்.ஜி.ஆர். கதைக்கு ஏற்றார் போல ஜெயலலிதா அல்லது சரோஜா தேவி என இருவரில் ஒருவரை முடிவு செய்தார் எம்.ஜி.ஆர்.
ஆனாலும், எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் நடிக்கும் வாய்ப்பு சரோஜா தேவிக்கே கிடைத்தது. எம்.ஜி.ஆருடன் அன்பே வா, படகோட்டி, எங்க வீட்டு பிள்ளை, பணத்தோட்டம், கலங்கரை விளக்கம், நாடோடி, தாய் சொல்லை தட்டாதே, பணத்தோட்டம், தர்மம் தலை காக்கும் என பல படங்களிலும் சரோஜா தேவி நடித்திருந்தார்.
இதையும் படிங்க: இனிமேல் எல்லாம் முடிஞ்சி போச்சி… சூப்பர்ஸ்டாரை பார்த்து பயந்த எம்.ஜி.ஆர்!..
எம்.ஜி.ஆருடன் சரோஜா தேவி நடித்த எல்லா படங்களுமே வெற்றிப்படங்கள்தான். ஒருகட்டத்தில் சரோஜா தேவி திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். சரோஜா தேவியின் கணவர் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்த போது உடைந்து போனார் சரோஜா தேவி.
அவரை நேரில் சென்று பார்த்து ஆறுதல் சொன்ன எம்.ஜி.ஆர் ‘இந்த சூழ்நிலையில் இருந்து நீ வெளியே வர வேண்டுமானால் அரசியலில் ஈடுபட வேண்டும்’ என கேட்டுகொண்டார். ஆனால், சரோஜா தேவிக்கு அதற்கு மறுப்பு தெரிவித்தார். எனவே, மீண்டும் சினிமாவில் நடிக்க அழைத்தார்.
இதையும் படிங்க: ஒரு போட்டோவை வச்சி படத்தை ஹிட் ஆக்கிய எம்.ஜி.ஆர்!.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!..
அதை ஏற்றுக்கொண்ட சரோஜா தேவி மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கினார். எம்.ஜி.ஆருடன் கடைசியாக ‘அரச கட்டளை’ படத்தில் நடித்திருந்தார். சரோஜா தேவிக்கு சண்டை காட்சிகள் என்றாலே பிடிக்காதாம். எதற்காக சண்டை போட வேண்டும். எல்லோரிடமும் அன்பாக இருக்க வேண்டும்’ என்பது அவரின் நிலைப்பாடு.
ஆனால், எம்.ஜி.ஆர் படத்தில் சண்டை காட்சி இல்லாமல் எப்படி?. அவரின் படங்களில் ரசிகர்கள் அதைத்தான் அதிகம் எதிர்பார்ப்பார்கள். எனவே, சரோஜா தேவியுடன் நடிக்கும் படங்களில் சண்டை காட்சி எடுக்கும்போது ‘சரோஜாதேவியை இங்கிருந்து போக சொல்லுங்கள்’ என சொல்லிவிடுவாராம் எம்.ஜி.ஆர். அவர் இல்லாத போதே சண்டை காட்சிகளில் நடிப்பாராரம் எம்.ஜி.ஆர்.