எம்.ஜி.ஆரை தனது வாரிசாக அறிவிக்க ஆசைப்பட்ட நடிகர்!.. ஆனால் நடக்காமல் போன சோகம்!..

நகைச்சுவையோடு சமுதாயத்திற்கு தேவையான நல்ல கருத்துக்களை சொல்வதையே தனது படங்களில் வழக்கமாக வைத்திருந்தார் "கலைவாணர்" என்.எஸ்.கிருஷ்ணன். கருப்பு, வெள்ளை காலத்திலேயே எழுச்சி மிக்க கருத்துக்கள் இல்லாத இவரது படங்களை காண்பது அரிது.

தனது காதல் மனைவியான மதுரத்துடன் ஜோடியாக படங்களிலும் வலம் வந்தார் இவர். இருவரும் தங்களது படங்களில் வரும் பாடல்களில் கூட நல்ல கருத்துக்களை பாடி விழிப்புணர்வை ஏற்படுத்தி இருந்தனர் . "சிரிக்கவும் வைப்பார், சிந்திக்கவும் வைப்பார்" என்கின்ற புகழுக்கு சொந்தக்காரர் என சொல்லப்பட்டவர் கலைவாணர்.

எம்.ஜி.ஆரின் வெற்றியை திரை மறைவிலிருந்து பார்த்து ரசித்தவர்கள் பலர். அப்படி இருக்கையில் எம்.ஜி.ஆருடன் நெருக்கமான உறவை கொண்டிருந்தார் என்.எஸ்.கிருஷ்ணன். ஆலமரம் போல வளர்ந்து மிகப்பெரிய இடத்திற்கு வந்தடைந்தனர். ஒருகட்டத்தில் அரசியலிலும் ஜொலித்தார் எம்.ஜி.ஆர்.

em.en

em.en

ஒரு கட்டத்தில் நடிகர், இயக்குனர் பாக்யராஜை தனது கலையுலக வாரிசாக அறிவித்தார் எம்.ஜி.ஆர். பாக்யராஜ் தமிழ் சினிமாவிலிருந்து ஒதுக்க முடியாதவராக இன்றும் இருந்து வருகிறார். திரைக்கதை என்றால் அதற்கு பாக்யராஜ் தான் என்று சொல்ல வைத்த வல்லவர். .

ஆனால் தன வாழ்நாளின் இறுதி வரை தனது கலையுலக வாரிசை பற்றி தெரியப்படுத்தாமல் இருந்தவர் கிருஷ்ணன். எம்.ஜி.ஆரை போல அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல் இருந்திருந்தாலும் தனது மனைவியிடம் இதனை பற்றி அடிக்கடி சொல்லி வந்தாராம் .

எதையும் சாதிக்கும் துணிச்சலும், அளவற்ற ஆற்றலும், அதீத அறிவும் நிச்சயம் ஒரு நாள் எம்.ஜி.ஆரை ஒரு மிகப்பெரிய இடத்திற்கு கொண்டு செல்லும் என அடிக்கடி சொல்வாராம். எம்.ஜி.ஆரின் தொடர் வெற்றிகளையும், வளர்ச்சியையும் சில காலங்கள் மட்டுமே உடனிருந்து பார்த்தாராம் என்.எஸ்.கிருஷ்ணன். அவர் அரசியலில் மிகப்பெரிய ஆளுமையாக மாறி ஆட்சி செய்தனை பார்க்கும், முன்னரே கிருஷ்ணன் காலமாகி விட்டார்.

அனால் அவர் என்றோ கணித்து தனது மனைவியிடம் சொன்ன ஒரு விஷயத்தை தவறாமல் செய்து முடித்து என்.எஸ்.கிருஷ்ணனனுக்கு பெருமையை மறைமுகமாக தேடித்தந்திருக்கிறார் எம்.ஜி.ஆர். இந்த தகவலை பிரபல சினிமா விமர்சகரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் தெரிவித்திருந்தார்.

 

Related Articles

Next Story