Cinema History
முதல்வரான பின்னரும் தேடிப்போய் நடிகரின் காலில் விழுந்த எம்.ஜி.ஆர்!.. அப்படி என்ன ஸ்பெஷல்?!..
திரையுலகை பொறுத்தவரை சீனியரை மதிப்பதெல்லாம் அரிதாகவே நடக்கும். தற்போது யார் பெரிய அளவில் இருக்கிறார்களோ, அதாவது ஹிட் படங்களை கொடுக்கிறார்களோ அதுவரைதான் ஒரு நடிகருக்கு மதிப்பு. ஓடும் குதிரையில் மட்டுமே தயாரிப்பாளர்கள் முதலீடு செய்வார்கள்.
ஒரு நடிகர் பல ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் அவர் ரிட்டயர்ட் ஆகிவிட்டாலோ அல்லது அவரின் படங்கள் ஓடவில்லை என்றாலோ யாரும் அவரின் பக்கம் போக மாட்டார்கள். இதுதான் சினிமா. சினிமாவில் கோலோச்சிய எல்லோருக்கும் இது தெரியும். தூங்கும்போது காலை ஆட்டிகொண்டே தூங்க வேண்டும். இல்லையேல் அடக்கம் செய்து விடுவார்கள். அதுதான் சினிமா.
இதையும் படிங்க: முதல்வர் ஆவதற்கு முன் நம்பியாருடன் எம்.ஜி.ஆர் போட்ட சண்டை!.. நடந்தது இதுதான்!..
ஆனால், அந்த காலத்தில் அப்படி இல்லை. சீனியர் நடிகர்களுக்கு அதிக முக்கியத்துவமும், மரியாதையும் கொடுத்தார்கள். இதற்கு எம்.ஜி.ஆரையே பெரிய உதாரணமாக சொல்ல முடியும். எம்.ஜி.ஆருக்கு முன் கோலிவுட்டில் கோலோச்சிய எம்.கே.ராதா, தியாகராஜ பகவாதர் மற்றும் டி.ஆர்.மகாலிங்கம் என 3 சூப்பர்ஸ்டார்கள் இருந்தார்கள்.
இவர்கள் எல்லோரின் படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் எம்.ஜி.ஆரே நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆர் அறிமுகமான சதிலீலாவதி படத்தில் ஹீரோவாக நடித்தவர் எம்.கே.ராதா. சந்திரலேகா படத்தில் நடித்தவர். எம்.ஜி.ஆரின் அபிமானத்துக்கு உரியவர். எம்.ஜி.ஆரும், அவரின் சகோதரர் சக்கரபாணியும் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேரப்போனது அங்கு முக்கிய நடிகராக இருந்தவர் எம்.கே.ராதா.
இதையும் படிங்க: சிவாஜிக்கு எம்.ஜி.ஆர் குரலில் பாடிய டி.எம்.எஸ்!.. இப்படி எல்லாம் கூட நடந்திருக்கா..?!
சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு முன்பே பெரிய ஹீரோவாக இருந்ததோடு இவருக்கென பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது. எம்.ஜி.ஆர் மீது எம்.கே.ராதாவுக்கு எப்போதும் அன்பும், பாசமும் உண்டு. எம்.ஜி.ஆர் முதல்வரான போது பதவியேற்கும் விழாவில் கலந்துகொண்டு அவரை வாழ்த்த வேண்டும் என ஆசைப்பட்டார் எம்.கே.ராதா. ஆனால், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் போக முடியவில்லை. இதனால் வருத்தப்பட்டார்.
ஆனால், அடுத்தநாள் அவரினி வீட்டின் முன்பு போலீஸ் ஜீப் வந்து நின்றது. முதல்வர் அங்கே வருகிறார் என சொல்லப்பட்டது. எம்.கே.ராதாவின் வீட்டுக்கு வந்த எம்.ஜி.ஆர் அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். எம்.கே.ராதா மனமார எம்.ஜி.ஆரை வாழ்த்தினார். எவ்வளவு உயரம் போனாலும் மற்றவர்கள் மதிப்பக்க வேண்டும் என்பதற்கு எம்.ஜி.ஆர் பெரிய உதாரணம்.