Cinema History
சிவாஜியின் ஆஸ்தான இயக்குனரை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய எம்.ஜி.ஆர்!.. காரணம் இதுதான்!…
MGR Sivaji: அந்த காலத்தில் இரு பெரும் சக்திகளாக இருந்தவர்கள் சிவாஜியும் எம்ஜிஆரும். மக்கள் திலகம் என எம்ஜிஆரும் நடிகர் திலகம் என சிவாஜியும் அவரவர் திறமைகளால் தமிழ் சினிமாவை கட்டிக் காத்து வந்தனர். இருவரும் தொழில் ரீதியாக போட்டிப் போட்டுக் கொண்டாலும் நிஜத்தில் ஒரு அண்ணன் தம்பிகளாகவே பழகி வந்தார்கள்.
எம்ஜிஆரை சிவாஜி அண்ணே என்றுதான் அழைப்பார். அந்தளவுக்கு பாசப்பிணைப்பில் தத்தளித்தனர். ஒரு விழா மேடையில் கூட சிவாஜிக்கு விருது கொடுக்கும் போது எம்ஜிஆர் சிவாஜியை ஆரத் தழுவி முத்தம் கொடுப்பதை பார்த்திருப்போம்.
இதையும் படிங்க: அந்த பிரபல நடிகர் வீட்டு விசேஷத்துல குடித்து விட்டு கும்மாளம் போட்ட ஸ்ரீதிவ்யா!.. அதோட கேரியர் காலி!
ஆனால் தொழில் என வந்துவிட்டால் இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என செயல்பட ஆரம்பிப்பார்கள். அப்போதெல்லாம் சிவாஜிக்கு என தனி பாணி இருக்கும். எம்ஜிஆருக்கு என தனி பாணி இருக்கும். அதனால் சிவாஜி படங்களில் பணியாற்றுபவர்களை தன் படங்களில் அனுமதிக்கமாட்டார் எம்ஜிஆர். எம்ஜிஆர் படங்களில் பணியாற்றுபவர்களை தன் படங்களில் அனுமதிக்கமாட்டார் சிவாஜி.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிவாஜியை வைத்து தொடர்ந்து பல படங்களை இயக்கியவர் பி. மாதவன். இவர் எம்ஜிஆரை வைத்து ஒரே ஒரு படத்தை மட்டும் இயக்கினார். அதுதான் ‘தெய்வத்தாய்’. அதுவரை ப. நீலகண்டன்தான் எம்ஜிஆரை வைத்து பல படங்களை இயக்கிக் கொண்டிருந்தார். தெய்வத்தாய் படத்தை ஆர். எம். வீரப்பன்தான் தயாரித்தார்.
இதையும் படிங்க: அஜித் படத்தில் நடந்த சூப்பர் இன்ஸிடண்ட்.. அமிதாப்பே பார்த்து மெய்சிலிர்த்த சம்பவம்! பின்ன நாங்கலாம் யாரு?
தெய்வத்தாய் படத்தின் மீது போக போக எம்ஜிஆருக்கு நம்பிக்கை பிறந்தது. அதனால் இயக்குனர் மாதவனிடமும் தயாரிப்பாளர் வீரப்பனிடமும் ‘இந்தப் படத்திற்கான இசையமைப்பு பணியில் என்னை அழைக்காமல் இருந்துவிட வேண்டாம். கண்டிப்பாக என்னிடம் சொல்லுங்கள். நானும் வருகிறேன்’ என கூறியிருந்தாராம். அவர் சொன்னதை போலவே எம்ஜிஆரும் இசையமைப்பு பணியில் ஈடுபட்டாராம்.
ஆனால் இடையிலேயே படப்பிடிப்பில் பிஸியாக இருந்த எம்ஜிஆரால் மேற்கொண்டு இசை சேர்ப்பு பணியில் வரமுடியாமல் போக படத்திற்கான இசையமைக்கும் வேலை தாமதமாகிக் கொண்டே இருந்ததாம். அதனால் எம்.எஸ்.வியும் மாதவனும் எம்ஜிஆர் இல்லாமலேயே படத்திற்கான இசையை முடித்துவிட்டார்களாம். அதன் பிறகு ஒரு நாள் எம்ஜிஆர் வந்து ‘இந்த காட்சியில் இப்படி இசை சேர்த்தால் நன்றாக இருக்கும். அதனால் அந்த காட்சியை போடுங்கள். நாம் ஆலோசித்து சேர்த்து விடலாம்’ என கூற,
இதையும் படிங்க: சின்ன கப்பு வச்சி அத மறச்சா எப்படி!.. ஜூம் பண்ணி ரசிக்க வச்சிட்டாரே தமன்னா!…
அங்கு இருந்த ஒரு உதவி இயக்குனர் ‘ஒட்டுமொத்த இசையும் முடிந்துவிட்டது’ என கூறியிருக்கிறார். அவ்வளவுதான் எம்ஜிஆர் மிகுந்த கோபத்துடன் மாதவனையும் எம்.எஸ்.வியையும் போட்டு வார்த்தைகளால் வெளுத்து வாங்கிவிட்டாராம். இந்த சம்பவத்தை பற்றி ஒரு கட்டுரையில் ஆர்.எம்.வீரப்பன் கூறியிருப்பதாக சித்ரா லட்சுமணன் தெரிவித்தார்.