அந்த ஒரு படத்துக்காக 18 படத்தை மிஸ் பண்ணேன்! ஆனா கடைசில என்னாச்சு தெரியுமா?

by Rohini |
mime
X

mime

Actor MimeGopi: சினிமாவில் நடிக்க வரும் ஒவ்வொரு நடிகர்களும் எப்படியாவது நமக்கான வாய்ப்பு கிடைக்காதா? என்று ஒவ்வொரு நாளும் ஏங்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு சிலர் வாய்ப்புகள் கிடைத்தும் அதை சரிவர பயன்படுத்திக் கொள்ளாமல் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் தட்டி கழித்து விடுவதும் உண்டு. அந்த வகையில் பிரபல நடிகரான மைம் கோபி தனக்கு கிடைத்த 18 படங்களின் வாய்ப்பை தட்டி கழித்திருக்கிறார்.

அதற்குக் காரணம் ஒரு பெரிய படத்தில் அவர் ஒப்பந்தம் ஆகி இருந்ததனால் அந்த சமயத்தில்தான் தொடர்ந்து 18 படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. அதனாலயே இந்த படத்தில் கமிட்டானதால் அந்த 18 படங்களையும் மறுத்துவிட்டாராம். அது தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் திரைப்படம். பேன் இந்தியா படமாக வெளியான இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார்.

இதையும் படிங்க: அட்டகாசமா?.. ஆளவிடுங்கடா சாமி ரகமா?.. அரண்மனை 4 நம்பி பார்க்க போலாமா?.. விமர்சனம் இதோ!..'

இந்த படத்தில் மைம் கோபி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த நேரத்தில் தான் தொடர்ந்து 18 படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. இவர் ஒன்றும் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகரும் இல்லை. அப்படி இருந்தும் ஏன் அந்த 18 படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பை மறுத்தார் என பத்திரிகை நிருபர் அவரிடம் கேட்டபோது அதற்கு மைம் கோபி எல்லா படங்களிலும் நடிக்க வேண்டும் என்பது எனக்கு எண்ணம் கிடையாது.

எனக்கு கிடைக்கிற கதாபாத்திரம் மக்கள் மனதில் எந்த அளவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. அந்த கதாபாத்திரத்திற்கு நான் ஏற்றவனாக இருக்கிறேனா இல்லையா என்பது தான் என்னுடைய முதல் கேள்வி. அதனாலயே அந்த படங்களில் நான் நடிப்பதை மறுத்து விட்டேன் என கூறியிருக்கிறார். சலார் திரைப்படம் தெலுங்கில் மிகப்பெரிய அளவில் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்ற திரைப்படமாகும்.

இதையும் படிங்க:இளையராஜா – வைரமுத்து ரெண்டு பெருமே வொர்த் இல்ல!.. கங்கை அமரன் உளறக்கூடாது!. பிரபலம் சொல்வது என்ன?..

யாரும் எதிர்பாராத ஒரு வசூலை வாரி இறைத்த படமாக சலார் திரைப்படம் அமைந்தது. கே ஜி எஃப் என்ற மிகப்பெரிய ஹிட்டுக்கு பிறகு பிரசாந்த் நீல் இயக்கிய படமாக சலார் திரைப்படம் அமைந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த எதிர்பார்ப்பை தெலுங்கு சினிமாவில் இந்த படம் பூர்த்தி செய்தது.

மேலும் மைம் கோபி குக் வித்கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் ஒரு நிலையான இடத்தை பெற்றார். அதுவரை இவரை திரையில் ஒரு வில்லனாகவே பார்த்த ரசிகர்களுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் இவருக்குள் இப்படி ஒரு மனிதர் இருக்கிறாரா என்ற ஒரு எண்ணத்தை வரவழைத்தது. அந்த அளவுக்கு சக போட்டியாளர்களிடம் அவர் நடந்து கொள்ளும் விதம் பேசும் விதம் என அனைத்தும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

இதையும் படிங்க: வெறும் சட்டை மட்டும்தான்!. சைனிங் லெக் பீஸ் காட்டி ஜூம் பண்ண வைக்கும் ஆண்ட்ரியா!…

Next Story