Connect with us

latest news

அட்டகாசமா?.. ஆளவிடுங்கடா சாமி ரகமா?.. அரண்மனை 4 நம்பி பார்க்க போலாமா?.. விமர்சனம் இதோ!..`

சுந்தர் சி இயக்கி ஹீரோவாக நடித்துள்ள அரண்மனை 4 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. கடந்த வாரம் வெளியான விஷாலின் ரத்னம் படத்துடன் போட்டியாக இந்த படம் வெளியாகி இருந்தால், அந்த படத்துக்கு கிடைத்த குறைந்த பட்ச வசூல் கூட கிடைத்திருக்காது. அந்த அளவுக்கு சுந்தர் சி, தமன்னா, ராஷி கன்னா, ராமச்சந்திரா ராஜு, சந்தோஷ் பிரதாப், கே.எஸ். ரவிக்குமார், யோகி பாபு, கோவை சரளா, லொள்ளுசபா சேஷு, விடிவி கணேஷ் மற்றும் சுந்தர் சி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள அரண்மனை 4 படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பை கொடுத்துள்ளனர்.

இந்தக் கோடை விடுமுறைக்கு ஏசி தியேட்டரில் போய் படம் பார்க்கலாம் என்றாலும் ஒரு நல்ல படம் கூட வராத நிலையில் ரசிகர்கள் ஊட்டி மற்றும் கொடைக்கானல் என அங்கே டிராபிக் ஜாமை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அரண்மனை 4 திரைப்படம் ரசிகர்களை சிரிக்க வைத்து, திகில் ஊட்டி எனது குடும்பத்துடன் பார்க்கும் அளவுக்கு உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: வெறும் சட்டை மட்டும்தான்!. சைனிங் லெக் பீஸ் காட்டி ஜூம் பண்ண வைக்கும் ஆண்ட்ரியா!…

சுந்தர் சி தொடர்ந்து இந்த படத்தை பெரிதளவில் நம்பி அதிக புரமோஷன்களையும் செய்து வந்தார். தமன்னா மற்றும் ராஷி கன்னா இருவரும் பல்வேறு யூடியூப் சேனல்களுக்கும் பேட்டி அளித்து வந்தனர். இந்நிலையில், அரண்மனை 4 திரைப்படத்தின் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

காதல் திருமணம் செய்து கொண்டு சந்தோஷ் பிரதாப் உடன் தமன்னா தனியாக வாழ்ந்து வருகிறார். அவருக்கும் ஒரு குடும்பத்துக்கும் நீ எந்த ஒரு பேச்சு வார்த்தையும் இல்லாமல் பல ஆண்டுகள் செல்கின்றன. திடீரென தமன்னா மற்றும் அவரது கணவர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் தமன்னாவின் அண்ணனான சுந்தர் சிக்கு தெரிய வர தங்கையின் குடும்பம் என்ன ஆனது? தங்கையின் குழந்தை என்ன ஆனது? என்கிற தேடலில் களமிறங்கும் நாயகன் சுந்தர் சி ‘பாக்’ எனும் பேய் தாக்கி தனது தங்கை மற்றும் அவரது கணவர் உயிரிழந்துள்ளனர் என்பதை கண்டறிகிறார்.

இதையும் படிங்க: கமலுக்கு பிடிக்காத 3 வார்த்தை!. சொன்னா செம கடுப்பாயிடுவாரு!.. பிரபலம் சொன்ன தகவல்!..

தங்கையின் குழந்தையும் அந்தப் பேய் கொல்லத் துடிக்கும் நிலையில், அந்த பேயிடமிருந்து தந்தையின் குழந்தையை காப்பாற்ற சுந்தர்சி எப்படி எல்லாம் போராடுகிறார். அவருக்கு யார் உதவி செய்கிறார் தமன்னாவை அந்த பேய் ஏன் கொல்கிறது என்கிற கதையுடன் விறுவிறுப்பாக அரண்மனை 4 படத்தை ஹாரர் காமெடி படமாக சுந்தர் சி கொடுத்துள்ளார்.

இந்த படத்தில் தமன்னாவின் நடிப்பு கடைசிவரை ரசிகர்களை படம் பார்க்க வைக்கிறது. படம் எடுக்க கிளாமர் உடையில் வராமல் சேலை கட்டி குடும்ப பாங்கான பெண்ணாகவே வந்து செல்கிறார். திரில் காட்சிகளில் விஷுவல் எபெக்ட்ஸ் மற்றும் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பிஜிஎம் ரசிகர்களை மிரட்டுகிறது.

இதையும் படிங்க: அந்த நடிகையை இன்ஸ்பிரேஷனா வச்சுதான் போட்டேன்! லேடி கெட்டப் ரகசியத்தை பகிர்ந்த கவின்

பேய் ஓட்டும் கதாபாத்திரத்தில் கே ஜி எஃப் வில்லன் நடிகர் ராமச்சந்திரா ராஜு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பெரிய நகைச்சுவை பட்டாளம் இருந்தாலும் கோவை சரளா காஞ்சனா படங்களில் நடித்து கலக்கியது போல இந்தப் படத்திலும் காமெடியில் கலக்குகிறார். யோகி பாபு மற்றும் விடிவி கணேஷ ஒரு சில இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைக்கின்றனர்.

காமெடி காட்சிகளை குறைத்துவிட்டு ஹாரர் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் சுந்தர் சி கொடுத்துள்ள நிலையில் படத்தை ஒருமுறை பார்க்க வைக்கிறது. ஆனால், ஏகப்பட்ட கிரிஞ்ச் விஷயங்கள் வழக்கமான அரண்மனை பட ஃபார்மட் கடுப்பேற்றுகிறது.

இதையும் படிங்க: நான் ஜேசன் சஞ்சய் படத்தில் நடிக்கிறேனா? ஓபனாக சொன்ன கவின்.. அப்போ அது உண்மைதானா?

“அச்சச்சோ” கிளாமர் பாடல் படம் முடித்து கடைசியாக போடப்படுகிறது. கடைசி வரை ஆடியன்ஸை தியேட்டரில் கட்டிப்போட சுந்தர் சி தேர்ந்தெடுத்த கவர்ச்சி ஆயுதம் தான் அது என தெரிகிறது. ராஷி கன்னா அந்த பாடலில் ஆடுவதை தவிர்த்து படத்தில் அரண்மனையின் சொந்தக்காரியாக வந்தாலும் அவரது கேரக்டர் பெரிதாக வொர்க்கவுட் ஆகவில்லை.

சூப்பராக இல்லை என்றாலும் சுமாருக்கு கொஞ்சம் மேல் என்றே சொல்லும் அளவுக்கு சுந்தர். சி மற்ற அரண்மனை படங்களை விட சிறப்பான ஒரு படத்தை கொடுத்திருக்கிறார். சிம்ரன் கிளைமேக்ஸில் ஆடும் டான்ஸ் நல்லா இருக்கு.

அரண்மனை 4 ஆறுதல் பரிசு!

ரேட்டிங் – 3/5

google news
Continue Reading

More in latest news

To Top