சொர்க்கம்.. நரகம்.. ரெண்டுமே குக் வித் கோமாளிதான்!.. ஷாக் கொடுத்த மைம் கோபி...
விஜய் டிவியில் சிரிப்புக்கு பஞ்சமில்லாமல் நடத்துகின்ற நிகழ்ச்சியில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி குக் வித் கோமாளி. 4 சீசன்களை கடந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக வலம் வருகிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.
அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் ரக்ஷன் மற்றும் பிரபல சமையல் நிபுணர்களான வெங்கட் பட் , தாமோதரன் நடுவர்களாக இருந்து 4 சீசன்களையும் வெற்றிகரமாக நடத்திக் காட்டியிருக்கிறார்கள். சின்னத்திரை பிரபலங்கள் முதல் வெள்ளித்திரை பிரபலங்கள் வரை அனைவருமே போட்டியாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை உற்சாகப்படுத்தியிருக்கிறார்கள்.
நடந்து முடிந்த 4வது சீசனில் முதல் வெற்றியாளராக ஜெயித்தவர் சினிமா பிரபலம் மைம் கோபி. பல படங்களில் தனது வில்லத்தனத்தால் மிரட்டி வந்த மைம் கோபி இந்த நிகழ்ச்சியில் அனைவரும் விரும்பும் பிரபலமாகவே மாறினார்.
இதையும் படிங்க : நடிக்க வைக்க நெருங்கிய கோலிவுட் இயக்குனர்கள்… கறாராக சாரி சொன்ன ஜேசன் சஞ்சய்!
இந்த நிலையில் குக் வித் கோமாளியை பற்றி ஒரு பேட்டியில் மைம் கோபி சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதாவது குக் வித் கோமாளியில் உள்ள அனைவரும் அன்பை கொட்டுவார்கள் என்றும் அங்கு இருக்கும் நடுவர்களான பட் நிறைய விஷயங்களில் மோட்டிவேட் பண்ணுவார் என்றும் தாமோ அப்பா ஒரு அப்பாவே பழகுவார் என்றும் கூறினார்.
மேலும் பெண் போட்டியாளர்கள் சகோதரிகளாகவே மாறினார்கள் என்றும் கவலையை மறக்க வேண்டும் என்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போகலாம் என்றும் கூறினார். குக் வித் கோமாளி ஒரு செட் இல்லை, அது ஒரு அழகான கோயில் என்றும் தன்னை மெய்மறந்து கூறினார்.
சொர்க்கத்தை பார்க்க வேண்டுமா? குக் வித் கோமாளிக்கு போ, நரகத்தை பார்க்க வேண்டுமா? அதற்கு குக் வித் கோமாளிக்கு போ என கூறினார். மேலும் நரகம் என்று எதற்காக கூறினேன் என்றால் சமைக்கிற நேரத்தில் செட் ஒரே பரபரப்பாக இருக்கும் என்றும் எந்த டாஸ்க்கை எப்பொழுது சொல்வார்கள் என்றே தெரியாது என்றும்,
இதையும் படிங்க : பொன்னியின் செல்வன் படத்தின் பின்னணி… மணிரத்னம் ஆசையை நிறைவேற்ற களமிறங்கியது அவரின் மகனா?
குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும், சில சமயங்களில் சமைப்பதே மறந்து போய்விடும் இதற்காகத்தான் அப்படி சொன்னேன் என்று மைம் கோபி கூறினார்.